புஷ்கர் மற்றும் காயத்ரி எழுத்தில், வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு, பிரம்மா மற்றும் சர்ஜுன் கே.எம் இயக்கத்தில் உருவான ‘சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2’, குடும்ப உறவுகள், காதல், தியாகம் மற்றும் மனித உணர்வுகளின் இயக்க கூறுகளுடன் பின்னிப்பிணைந்த ஒரு க்ரைம் திரில்லராக உருவாகியுள்ளது.
கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரங்களில் தோன்ற அவர்கள் உட்பட லால், சரவணன், கௌரி கிஷன், மோனிஷா பிளெஸ்ஸி, சம்யுக்தா விஸ்வநாதன், ஷ்ரிஷா, அபிராமி போஸ், நிகிலா சங்கர், ரினி, கலைவாணி பாஸ்கர், அஸ்வினி நம்பியார் மற்றும் மஞ்சிமா மோகன் ஆகியோர் அடங்கிய ஒரு மிகப்பெரிய திறமை வாய்ந்த நட்சத்திரப் பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் தோன்றி நடித்துள்ளனர்.
மனதை பதைபதைக்கச்செய்யும் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லரான சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, அதன் அழுத்தமான கதைக்களம் மற்றும் ஆற்றல் மிக்க உணர்ச்சிகரமான நடிப்பாற்றலுடன் ஒரு விறுவிறுப்பான கதையை ரசிகர்களுக்கு வழங்குகிறது.
குடும்ப உறவுகள், காதல், தியாகம், நேர்மை, பழிவாங்கல் மற்றும் அச்சம் போன்ற உணர்வு பூர்வமான கருப்பொருள்களுடன் பின்னிப்பிணைந்த இந்த சீசனின் கதைக்களம் சிக்கல் நிறைந்த புதிரான காளிபட்டணத்தின் சமூகக் கட்டமைப்பை சீர்குலைக்கும் ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒரு மரணத்தைச் சுற்றி வலம் வருகிறது. மேலும் ஒரு புதிய மர்மத்தையும் கட்டவிழ்க்கிறது. அதே வேளையில் அதன் ஆழத்தில் மறைந்திருக்கும் கண்ணுக்குப் புலப்படாத விசயங்களையும் வெளிக்கொண்டு வருகிறது . மனித உளவியலின் ஆழங்களையும், மற்றவர்களுடனான தனிநபர்களின் முரண்பாடுகளையும் பிரதிபலிக்கும் சுழல் – தி வோர்டெக்ஸ் சீசன் 2, பார்வையாளர்களை எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் திடுக்கிடும் மாற்றங்கள் நிறைந்த ரகசியங்கள் மற்றும் பொய்களால் சூழப்பட்ட ஒரு உலகத்திற்குள் கொண்டு சென்று இறுதி வரை அவர்களை இருக்கையின் ஒரு விளிம்பில் வைக்கிறது.
சுழல்-தி வோர்டெக்ஸ் சீசன் 2 இந்தியா மற்றும் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரைம் வீடியோவில் பிப்ரவரி 28 அன்று பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.