Friday, March 28, 2025
spot_img
HomeCinemaயோகிபாபு நடிக்கும் சன்னிதானம் (P.O) படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பு... அடுத்த வருட கோடை விடுமுறையில்...

யோகிபாபு நடிக்கும் சன்னிதானம் (P.O) படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பு… அடுத்த வருட கோடை விடுமுறையில் படத்தை வெளியிட தயாராய்கும் படக்குழு!

Published on

யோகிபாபு, கன்னட திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகிய மூவரும் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் சன்னிதானம் (P.O) அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளது.

சித்தாரா, பிரமோத் ஷெட்டி, ‘மூணாறு’ ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகொடி, சாத்விக், அஷ்வின் ஹாசன், வினோத் சாகர், ‘கல்கி’ ராஜா, விஷாலினி, தாஷ்மிகா லக்ஷ்மன் மற்றும் மது ராவ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் சபரிமலை ஐயப்பன் சன்னிதானம், பம்பை, எருமேலி போன்ற இடங்களிலும், தமிழ்நாட்டில் சென்னை மற்றும் பொள்ளாச்சியிலும் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளதோடு, தயாரிப்புக்கு பிந்தைய பணிகளும் நடைபெற்று வருகின்றன.

சபரிமலைக்கு பயணிக்கும் ஐயப்ப பக்தர்கள் செல்லும் வழியில் அவர்கள் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அதனால் அவர்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையப்படுத்தி மனித உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு, கதைக்கு முக்கியத்துவமுள்ள விதத்தில் உருவாகியுள்ளது.

கதை மற்றும் திரைக்கதை அஜினு ஐயப்பன் எழுத, அருண்ராஜ் இசையமைக்கிறார். படத்தின் ஒளிப்பதிவாளராக வினோத் பாரதியும், படத்தொகுப்பாளராக பி.கே-வும் பணியாற்றுகிறார்கள். விஜய் தென்னரசு கலை இயக்கத்தை மேற்கொள்ள, மெட்ரோ மகேஷ் சண்டை பயிற்சியை வடிவமைக்க, ஜாய் மதி நடனத்தையும் கவனிக்கிறார்கள். நடராஜ் ஆடை வடிவமைப்பாளராகவும், மோகன் ராஜன் பாடலாசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்கள்.

தமிழ், கன்னடம், துளு, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பான் இந்தியத் திரைப்படமாக தயாராகி வருகிறது.

‘தூது மதிகே’ போன்ற திரைப்படங்களை தயாரித்த கன்னட தயாரிப்பு நிறுவனமான ‘சர்வதா சினி கராஜ்’ மற்றும் மலையாள திரை உலகில் வீரப்பன், சூர்யவம்சி, வாங்க்கு(தயாரிப்பு), நல்ல சமயம்(வெளியீடு), விரைவில் வெளியாகவுள்ள ருதிரம்(படைப்பாக்க தயாரிப்பு) போன்ற திரைப்படங்களை தயாரித்த முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஷிமோகா கிரியேஷன்ஸ்’ உள்ளிட்ட நிறுவனங்கள் தயாரிக்க, அமுதா சாரதியின் வசனம் மற்றும் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ‘சன்னிதானம் (P.O)’. இத்திரைப்படத்தை மது ராவ், வி விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படக்குழு:

வசனம் மற்றும் இயக்கம்: அமுதா சாரதி
கதை மற்றும் திரைக்கதை: அஜினு ஐயப்பன்
தயாரிப்பாளர்கள்: மது ராவ், வி விவேகானந்தன் மற்றும் ஷபீர் ஃபடான்
தயாரிப்பு: சர்வதா சினி கராஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ்
ஒளிப்பதிவு: வினோத் பாரதி
இசை: அருண்ராஜ்
படத்தொகுப்பு: பி.கே
கலை இயக்கம்: விஜய் தென்னரசு
துணை இயக்குனர்கள்: ஷக்கி அஷோக் மற்றும் சுஜேஷ் அன்னியப்பன்
சண்டைப் பயிற்சி: ‘மெட்ரோ’ மகேஷ்
பாடல்கள்: மோகன் ராஜன்
நடன இயக்கம்: ஜாய் மதி
ஆடை வடிவமைப்பு: நடராஜ்
ஒப்பனை: சி ஷிபுகுமார்
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர்கள்: ரிச்சர்ட் மற்றும் D. முருகன்
நிர்வாக தயாரிப்பு: விலோக் ஷெட்டி
இணை இயக்குனர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்
உதவி இயக்குனர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா
விளம்பர வடிவமைப்பு: வி எம் ஷிவகுமார்
படங்கள்: ரெனி மோன்
மக்கள் தொடர்பு: ரியாஸ் கே அஹ்மத், பாரஸ் ரியாஸ்

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....