Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaபகவதி பாலா நடிப்பில், இளம் பெண்கள் மாயமாகும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவான 'சவுடு' ரிலீஸுக்கு தயார்!

பகவதி பாலா நடிப்பில், இளம் பெண்கள் மாயமாகும் விறுவிறுப்பான கதைக்களத்தில் உருவான ‘சவுடு’ ரிலீஸுக்கு தயார்!

Published on

ஜெயந்தன் அருணாசலம் இயக்கத்தில் லாக்ஸ் பிலிம்ஸ் ஸ்ரீ கண்ணன் லட்சுமணன் தயாரித்துள்ள படம் ‘சவுடு.’

பகவதி பாலா இன்ஸ்பெக்டர் வீரபாண்டியனாகவும், ஊர்த் தலைவர் ராயப்பனாக படத்தின் தயாரிப்பாளர் ஸ்ரீகண்ணன் லட்சுமணனும் நடித்துள்ளனர்.

போண்டாமணி, சாப்ளின் பாலு, வைகாசிரவி, கிளிமூக்கு ராமச்சந்திரன் , மீசை ராதாகிருஷ்ணன், பொன்ராம், ஸ்ரீ கண்ணன், பகவதி பாலா, கீர்த்தி விக்னேஷ், ஆசிபா, கே.ஜி.ஆர்., ஏசி. ஜான் பீட்டர், சோபியா வைத்தீஸ்வரி , வி.ஜெ. ரெஜினா , பாண்டி முருகன், ஜானகிராமன், ராஜன், அஜித், ஆனந்த், ஐஷூ, அபிமன்யு, தூத்துக்குடி ரெஜினா, ஜார்ஜ், புதுவை கர்ணா சரவணகுமார், பழனிவேல், ஜெகதீஷ், அருண், அரசு, கவிதா, பாலசந்தர், விஜயகுமார், புவனேஷ் ஏராளமான பேர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, “ஒரு கிராமத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். இதனால் பெண்ணைப் பெற்றவர்கள் மிகவும் பீதிக்குள்ளாகி அவதிப்படுகின்றனர். இதனால் ஊர்தலைவரான ராயப்பன் காவல் துறைக்கு புகார் தெரிவிக்கிறார். மாயமான பெண்களை கண்டுபிடிக்க இன்ஸ்பெக்டர் வீரபாண்டியை காவல் துறை நியமிக்கிறது. அவர் தனது பாணியில் விசாரணையை துவக்குகிறார். மொத்தம் 14 இளம் பெண்கள் காணாமல் போனதாக அவருக்கு தெரிய வருகிறது. அதிர்ச்சி அடையும் அவர் விசாரணையை மேலும் தீவிரப்படுத்தியதில் ஒரு கும்பல் மாட்டுகிறது.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவருக்கு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. அதற்கு காரணமானவரின் பெயரை கும்பல் கூறியதும் இன்ஸ்பெக்டர் மேலும் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இப்படி பரபரப்பான கதையை எழுதி அதற்கு விறுவிறுப்பான திரைக்கதையை நானும் பகவதி பாலாவும் இணைந்து எழுதி உள்ளோம்” என்றார்.

படக்குழு:- ஏசி. ஜான் பீட்டர் இசையையும், பவர் சிவா நடன பயிற்சியையும், ஜேசுதாஸ் சண்டை பயிற்சியையும், ஜார்ஜ் கலையையும், ராம்நாத் படத்தொகுப்பையும், மகிபாலன் – பால்பாண்டி இருவரும் ஒளிப்பதிவையும் , ஜான் பீட்டர், ரம்யா முத்துபாபு, செல்வராஜ் மூவரும் பாடல்களையும் கவனித்துள்ளனர்.

படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!