சென்னை காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 20-வது சிறப்பு பட்டமளிப்பு விழா நவம்பர் 15; 2024 அன்று நடந்தது.
எஸ்.ஆர்.எம்., பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் டி. ஆர். பாரிவேந்தர்; எஸ்.ஆர்.எம்.,இன் இணை வேந்தர் டாக்டர். பி. சத்தியநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்தின் (AIIMS) முன்னாள் இயக்குநர், பேராசிரியர் மகேஷ் சந்திர மிஸ்ரா முதன்மை விருந்தினராக பங்கேற்று, அனைத்து துறைகளிலும் பட்டம் பெறும் மாணவர்கள் தங்களது வாழ்வில் முழுமையடைய, பல்வேறு நெறிமுறைகளை கையாள உதவும் விதத்தில் சிறப்புரையாற்றினார்.
எஸ்.ஆர்.எம்., துணைவேந்தர் பேராசிரியர் சி. முத்தமிழ்ச்செல்வன், வருடாந்திர அறிக்கையை வழங்கினார்.
அறிவியல் மற்றும் மனிதவியல், மருத்துவம் மற்றும் சுகாதார அறிவியல், மேலாண்மை, சட்டம் மற்றும் வேளாண்மை ஆகிய துறைகளில், 10,848 மாணவர்கள் தங்களின் பட்டங்களைப் பெற்றனர்.