Monday, March 24, 2025
spot_img
HomeCinemaராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில், இன்ஸ்டாவில் பிரபலமான பெண்களை மையப்படுத்திய 'சாரி' டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது!

ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில், இன்ஸ்டாவில் பிரபலமான பெண்களை மையப்படுத்திய ‘சாரி’ டிசம்பர் 20-ம் தேதி வெளியாகிறது!

Published on

இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பில், கிரி கிருஷ்ணா இயக்கியுள்ள  ‘சாரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில்  வெளியாகவிருக்கிறது.

படத்தின் அடிப்படை கரு அதிகப்படியான காதல் பயமுறுத்தும் என்பதுதான். சமூக ஊடகங்களில் ஏற்படும் சில எதிர்பாராத விஷயங்கள் சமூகத்திலும் தனிப்பட்ட ஒருவர் வாழ்விலும் ஏற்படுத்தும் மாற்றங்களை இந்தப் படம் பேசுகிறது. இதில் ஆராத்யா கதாநாயகியாகவும், சத்யா யாது பயமுறுத்தும் பயங்கரமான காதலனாகவும் நடித்துள்ளார். மேலும், இன்ஸ்டாகிராமில் உள்ள பிரபலமான பெண்களின் சூழ்நிலை மற்றும் அவர்கள் எளிதில் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகளையும் பேசும் படமாக பல த்ரில்லர் தருணங்களுடன் ‘சாரி’ இருக்கும்.

ராம்கோபால் வர்மா இந்திய சினிமாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவர்.  தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர். பயமுறுத்தும் திகில் கதைகள், யதார்த்தமான கதைகள் மற்றும் பல உண்மை மாஃபியா கதைகளை திரையில் கொண்டு வந்து பலரது பாராட்டுகளையும் பெற்றிருக்கிறார் ராம்கோபால் வர்மா. அவரது பெருமையை எடுத்துக்காட்டும் விதமாக அவர் இயக்கிய ‘பூத்’ திரைப்படம் பல நகரங்களில் ஹாலோவீன் விழாவிற்காக மீண்டும் வெளியிடப்பட்டு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. பல இளம் திறமையாளர்களை தொடர்ந்து ஊக்குவித்து வருபவர். அந்த வகையில் கிரி கிருஷ்ணாவுக்கு படம் இயக்க வாய்ப்பளித்துள்ளார்.

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this