Monday, April 21, 2025
spot_img
HomeMovie Review'சட்டம் என் கையில்' சினிமா விமர்சனம்

‘சட்டம் என் கையில்’ சினிமா விமர்சனம்

Published on

காவல்துறை மீதும் நீதித்துறை மீதும் நம்பிக்கை விட்டுப்போகும்போது சில துணிச்சலான மனிதர்கள் சட்டத்தைக் கையிலெடுப்பது வழக்கம். அப்படியொரு துணிச்சலான மனிதனை முதன்மைப் பாத்திரமாக்கி சுற்றிச் சுழல்கிறது முற்றிலுமாக காமெடி தவிர்த்து சதீஷ் நடித்திருக்கும் ‘சட்டம் என் கையில்.’

குடித்துவிட்டு கார் ஓட்டியதற்காக போலீஸ் பிடியில் சிக்குகிறார் சதீஷ். வரும் வழியில் அதே கார் மோதி இறந்தவன் டிக்கியில் அடைக்கப்பட்டிருக்கிறான். காரும் அவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு போய்ச் சேர, ஸ்டேஷனில் இருந்தபடியே காரிலிருக்கும் டெட் பாடி போலீஸ் பார்வையில் படாமலிருக்க திட்டம் தீட்டுகிறார். அந்த திட்டம் அவருக்கு சாதகமாக அமைந்ததா இல்லையா என்பதே கதை…

எதிராளி போட்டிருக்கும் செருப்பைக் கழற்றி அவனையே அடிப்பதுபோல், போலீஸாருக்குள் இருக்கும் ஈகோவை வைத்து தான் தப்பிப்பதற்கான வியூகம் வகுப்பதாகட்டும், தன் தங்கையின் உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை அதிகாரியை சாமர்த்தியமாக வெளியுலகுக்கு அடையாளம் காட்டுவதாகட்டும் சதீஷின் அப்பாவித்தனமும் அடப்பாவி’த்தனமும் கலந்து கட்டிய நடிப்பு பாராட்டும்படியிருக்கிறது.

பாவெல் நவகீதன் நீதி நேர்மை நியாயம் என எதைப் பற்றியும் யோசிக்காமல் தன் மனம்போன போக்கில் ரவுடித்தனமாக நடந்துகொள்ளும் காவல்துறை அதிகாரியாக வருகிறார். நடிப்பில் பாத்திரத்திற்கேற்ற திமிர்த்தனத்தை கச்சிதமாக தருகிறார்.

காவல்துறை உயரதிகாரி கேரக்டரில் உருட்டல் மிரட்டல் என எதுவுமில்லாமல் சின்னச்சின்ன செய்கைகளால் ஈகோவை வெளிப்படுத்தும் அஜய் ராஜின் நடிப்பு அசத்துகிறது.

சதீஷுக்கு தங்கையாக வருகிற ரித்திகா, ஒரு குழந்தையின் மரணத்துக்கு காரணமாக இருந்த போலீஸ் அதிகாரிக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து கவனம் ஈர்க்கிறார்.

வித்யா பிரதீப், இ ராம்தாஸ், பவா செல்லதுரை, ஜீவா ரவி, கே பி ஒய் சதீஷ் என மற்றவர்கள் கதையின் தேவையை நிறைவேற்றியிருக்க, எம் எஸ் ஜோன்ஸின் பின்னணி இசை கதையின் விறுவிறுப்புக்கு எனர்ஜி ஏற்றியிருக்கிறது.

கதை நிகழும் ஏற்காடு இரவிலும் பசுமை குறையாமல் பி ஜி முத்தையாவின் கேமராவில் நிரம்பியுள்ளது.

கொலை, பழிவாங்கல் என சீரியஸான கதையை கையிலெடுத்த இயக்குநர் சாச்சி, காமெடி நடிப்பில் புகழ்பெற்ற ஒருவரை ஹீரோவாக்கியிருப்பது வித்தியாசமான முயற்சி என்றால்,

அவர் கதையை புரிந்துகொண்டு நடித்திருப்பது, கிளைமாக்ஸ் வரை கதையில் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் தக்கவைத்திருப்பது, கமர்ஷியல் அம்சங்கள் என்ற பெயரில் மனம்போனபோக்கில் மசாலா சங்கதிகளை திணிக்காதது படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது!

Rating 3.5 / 5 

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!