HomeCinemaமனதைக் கவரும் போஸ்டரில் வெளியானது சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி இணையும்...

மனதைக் கவரும் போஸ்டரில் வெளியானது சார்மிங் ஸ்டார் ஷர்வா, பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி இணையும் ஷர்வா 38 படத்தின் அறிமுகம்!

Published on

சார்மிங் ஸ்டார் ஷர்வா, தனது பன்முகத் திறமையை வெளிப்படுத்தும் வித்தியாசமான களங்களில், அசத்தலான படங்களைத் தந்து வருகிறார். தற்போது பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான ஷர்வா 38’ல் இணைந்துள்ளார்.

அற்புதமான பொழுதுபோக்கு கமர்ஷியல் படங்களை தருவதில், பெயர் பெற்ற பிளாக்பஸ்டர் மேக்கர் சம்பத் நந்தி இப்படத்தை இயக்குகிறார். லட்சுமி ராதாமோகன் வழங்க, கே.கே.ராதாமோகன் ஸ்ரீ சத்யசாய் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில், தங்களது 15-வது படைப்பாக, இப்படத்தை, மிக அதிக பொருட்செலவில் மற்றும் அற்புதமான தொழில்நுட்பத் தரத்துடன் இப்படத்தை தயாரிக்கிறார்.

1960களின் பிற்பகுதியில், தெலுங்கானா-மகாராஷ்டிரா எல்லையில், வடக்கு தெலுங்கானாவின் கிராமப்புற பின்னணியில், இரத்தமே தீர்வாக இருக்கும் களத்தில், நடைபெற்ற சம்பவத்தை, அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகவுள்ளது. இது இந்திய திரைத்துறையில் இது வரையிலும் பதிவாகாத வரலாறாக இருக்கும்.

ஷர்வா38 உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன், இரத்தமும் சதையுமாக தெறிக்கும், ஆக்‌ஷன் திரைப்படமாக இருக்கும். சம்பத் நந்தி மற்றும் ஷர்வாவின் கூட்டணியில், இதுவரையிலான திரைத்துறை வரலாற்றில், இல்லாத புதுமையான படைப்பாக, இந்திய திரையுலகம் கண்டுகொள்ளாத ஒரு வரலாற்றின் கதையைச் சொல்லும் படமாக இருக்கும்.

உலகளாவிய பார்வையாளர்களை ஈர்க்கும் வகையிலான கதை என்பதால், பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக இப்படத்தை உருவாக்குகிறார்கள், இது ஷர்வா மற்றும் சம்பத் நந்தி இருவருக்கும் முதல் முறையாகும்.

சில காலமாக இக்கதையை வெகு கவனத்துடன் உருவாக்கி வரும் இயக்குநர், ஷர்வாவை இதுவரை கண்டிராத புதுமையான கேரக்டரில் இப்படத்தில் காட்டவுள்ளார். ஷர்வா 60 களில் இருந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக பயிற்சி எடுத்து வருகிறார். படத்தின் அறிவிப்பு போஸ்டர் ஒரு பாலை நிலத்தில் தீ வெடிப்பதைக் காட்டுகிறது.

மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் பிற முக்கிய தொழில்நுட்ப வல்லுநர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும். படம், தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.

ஷர்வா38 சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களுடன், உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் இப்படம் உருவாகிறது. சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்ய, இசையமைப்பாளர் பீம்ஸ் செசிரோலியோ இசையமைக்கிறார். கிரண் குமார் மன்னே கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படக் குழு:
எழுத்து, இயக்கம் : சம்பத் நந்தி
தயாரிப்பாளர்: கே.கே.ராதாமோகன்
தயாரிப்பு நிறுவனம் : ஸ்ரீ சத்ய சாய் ஆர்ட்ஸ் வழங்குபவர் : லட்சுமி ராதாமோகன்
ஒளிப்பதிவு : சௌந்தர் ராஜன் எஸ்
இசை: பீம்ஸ் சிசிரோலியோ
கலை இயக்குனர்: கிரண் குமார் மன்னே
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Latest articles

‘டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct) நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னர் ராக் ஸ்டார் அனிருத்!  

'டீகன்ஸ்ட்ரக்ட்' இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன...

தண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா… ‘மிஸ்டர் X’ படத்தில் அதிரடி காட்சி!

நடிகர் ஆர்யா 'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்தியிருக்கிறார். இதுபற்றி...

வீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.'...

அஜித் – ஷாலினி நடித்த கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ்!

அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று...

More like this