நட்டி நடராஜ், நிஷாந்த் ரூசோ இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, பாடினி குமார் கதாநாயகியாக நடிக்கும் ‘சீசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்டார்.
புதுமையான கதைக்களத்தில் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில் நிழல்கள் ரவி, ஜீவா ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். குணா சுப்பிரமணியம் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
டாக்டர் கா.செந்தில் வேலன் படத்திற்கான கதையை எழுது, தனது விடியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் பணிபுரியும் சரண்குமார் இசையமைக்க, பெருமாள் மற்றும் மணிவண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.