Thursday, March 27, 2025
spot_img
HomeCinemaதீரன் நடிக்கும் 'சாலா' டிரெய்லரை வெளியிடும் அல்லு அர்ஜுன்!

தீரன் நடிக்கும் ‘சாலா’ டிரெய்லரை வெளியிடும் அல்லு அர்ஜுன்!

Published on

வட சென்னையில் உள்ள பிரபல மதுபானக் கூடத்திற்காக இரண்டு துருவங்கள் மோதிக் கொள்ளும் போராட்டத்தை விறுவிறுப்பு குறையாமல் விவரிக்கும் படம் ‘சாலா.’

தீரன் (அறிமுகம்), ரேஷ்மா வெங்கடேசன் (அறிமுகம்), ‘மெட்ராஸ்’ புகழ் சார்லஸ் வினோத், அருள்தாஸ், ஸ்ரீநாத், சம்பத் ராம், மற்றும் ஐடி அரசன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை, இயக்குநர் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய அனுபவமுள்ள எஸ்.டி. மணிபால் தனது முதல் படமாக இயக்கியுள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பார்வை பெரும் வரவேற்பை பெற்றதையடுத்து, படத்தின் டிரெய்லரை வரும் ஆகஸ்ட் 3 அன்று ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் வெளியிடுகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து சென்சாரில் யு/ஏ சான்றிதழ் பெற்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஆகஸ்ட் 23  அன்று வெளியாகவிருக்கிறது.

படம் குறித்து பேசிய இயக்குநர் மணிபால், ”வட சென்னையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுபானக் கூடம் (பார்) தான் ‘சாலா’ படத்தின் மையக்கரு. இந்த பாரை கைப்பற்ற சக்தி வாய்ந்த இரு குழுக்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதற்கிடையே, மதுக்கடையே இருக்கக் கூடாது என்று பெண் ஆசிரியர் ஒருவர் கடும் போராட்டத்தை முன்னெடுக்கிறார். இந்த மூன்று தரப்புக்கு இடையே நடக்கும் மோதல்களை காரமும் சாரமும் குறையாமல் திரையில் கொண்டு வந்திருக்கிறோம்.

வட சென்னை எனக்கு மிகவும் பிடித்த பகுதி. அங்குள்ள மக்களை பற்றியும், அவர்களது வாழ்க்கை குறித்தும் சினிமாவில் பதிவு செய்ய வேன்டும் என்ற ஆசை எனது முதல் படத்திலேயே நிறைவேறி உள்ளது மிக்க மகிழ்ச்சி. வட சென்னை மக்கள் மட்டுமில்லாமல், அனைத்து ரசிகர்களாலும் ‘சாலா’ பாராட்டப்படும் என நம்புகிறேன்” என்றார்.

படம் வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி வெளியாகவுள்ளது.

தெலுங்கு திரையுலகிந் முன்னணி தயாரிப்பு நிறுவனமான பீப்பிள் மீடியா ஃபேக்டரி டி ஜி விஷ்வபிரசாத், இந்த நேரடி தமிழ் படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. விவேக் குச்சிபொட்லா இணைந்து தயாரித்துள்ளனர்.

படக்குழு:- கிரியேட்டிவ் தயாரிப்பாளராக வி. ஸ்ரீ நடராஜும், நிர்வாக தயாரிப்பாளராக விஜயா ராஜேஷும் பங்காற்றியுள்ளனர். ரவீந்திரநாத் குரு ஒளிப்பதிவு செய்ய, தீசன் இசை அமைத்துள்ளார். கலை இயக்கத்தை வைரபாலன் கவனிக்க, படத்தொகுப்பை புவன், சண்டை பயிற்சியை மகேஷ் மேத்யூ மற்றும் ரக்கர் ராம், நடன இயக்கத்தை நோபுள் கையாண்டுள்ளனர். சவுண்ட் மிக்ஸிங்: லட்சுமி நாராயணன். அந்தோணி தாசன் மற்றும் சைந்தவி பாடல்களை பாடியுள்ளனர். புடொடக்ஷன் எக்சிக்கியூட்டிவ்: வி கே துரைசாமி

Latest articles

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

நடிகர் ராம்சரண் _ இயக்குநர் புச்சிபாபு சனா இணையும் ‘பெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது! 

  'குளோபல் ஸ்டார்' ராம்சரண், தேசிய விருது பெற்ற 'உப்பென்னா' படத்தின் இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில் 'பெடி' (PEDDI)...

More like this

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...