Friday, March 28, 2025
spot_img
HomeCinemaபடத்தில் கார் சேஸ், ஃபிளைட் பைட், கடலில் நடக்கும் காட்சிகள்... 1200 வி எஃப் எக்ஸ்...

படத்தில் கார் சேஸ், ஃபிளைட் பைட், கடலில் நடக்கும் காட்சிகள்… 1200 வி எஃப் எக்ஸ் ஷாட்ஸ்… -‘சதுர்’ பட விழாவில் எதிர்பார்ப்பைத் தூண்டிய இயக்குநர் அகஸ்டின் பிரபு

Published on

அமர் ரமேஷ், அஜித் விக்னேஷ் நடிப்பில் ஃபேண்டஸி ஜானரில், நான்கு விதமான காலகட்டத்தில் நடக்கும், வித்தியாசமான எண்டர்டெயினர் படைப்பாக உருவாகியுள்ள படம் ‘சதுர்.’

அகஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் தாமோதரன், ஜீவா ரவி, நக்கலைட்ஸ் செல்லா, சூர்யா, அர்னவ் ஹரிஜா, பிரதீப் அரி, கிரிஷ் பாலா, ஜெகன் கிரிஷ், பாய்ஸ் ராஜன், ராஜன் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

படம் விரைவில் வெளியாகவுள்ள படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் அகஸ்டின் பேசியபோது, ”இந்தப்படத்தில் 1200 VFX ஷாட்ஸ் இருக்கிறது. சாதாரணமாக சின்னப்படத்தில் இவ்வளவு சிஜி இருக்காது. தயாரிப்பாளரிடம் இரண்டு கதை சொன்னேன், இந்தக்கதை இந்த பட்ஜெட்டில் எடுக்க முடியாது என்றபோது, தியேட்டருக்கு வருபவர்கள், ஒரு புதுமையான அனுபவம் தர வேண்டும் என்றேன். பைலட் எடுத்து காட்டிய போது என்னை முழுதாக நம்ப ஆரம்பித்துவிட்டார்.

படம் முழுக்க நிறைய பிரம்மாண்டம் இருக்கிறது. கடலுக்குள் நடக்கும் காட்சி இருக்கிறது, கார் சேஸ், ப்ளைட் பைட், ஹிஸ்டாரிகல் காட்சிகள் என நிறைய இருக்கிறது. பாகுபலி அளவெல்லாம் முடியாது ஆனால் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்துள்ளோம். ரசிகர்கள் மீதான் நம்பிக்கையில் புதிய அனுபவம் தர வேண்டுமென, இப்படத்தை பார்த்து பார்த்து உருவாக்கியுள்ளோம்” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன், ”டிரெய்லர் பார்த்துவிட்டு வியந்துவிட்டேன். சின்ன பட்ஜெட்டில் இத்தனை விசயங்கள் கோர்த்து, மிக அழகாக எடுத்துள்ளார்கள். இந்தப்படம் கண்டிப்பாக கவனிக்கும்படியான படைப்பாக இருக்கும்” என்றார்.

நடிகர் ஜீவா ரவி, ”நல்ல கண்டண்ட் உள்ள படம் இது. படப்பிடிப்பில் ஒரு டப்பாவில் நிற்க சொன்னார் இயக்குநர். படத்தில் பார்த்தால் அது கடலுக்குள் லிப்டில் செல்கிறது. டிரெய்லரே மிரட்டலாக இருக்கிறது. புது குழுவினர் மிக அற்புதமாக படத்தை உருவாக்கியுள்ளனர். அகஸ்டின் இந்தப்படத்திற்கு பிறகு மிகப்பெரிய இயக்குனராக உருவெடுப்பார். கோயம்புத்தூரிலிருந்து லோகேஷுக்கு பிறகு இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார். இந்தப்படம் உங்களை வியக்க வைக்கும்” என்றார்.

நடிகர் அமர், ”படத்தில் நடிகனாக அறிமுகமாவது மிகப்பெரிய பெருமை. ஆர்க்கியாலஜிஸ்ட்டாக நடித்துள்ளேன், படத்தில் என் பெயர் தமிழ், அதுவும் எனக்கு பெருமை” என்றார்.

படைப்பில் பங்களிப்பு:-
எழுத்து, இயக்கம்: அகஸ்டின் பிரபு
இசை: ஆதர்ஷ்.
தயாரிப்பு: ராக்ஸ் நேச்சர் என்டர்டெயின்மென்ட் ராம் மணிகண்டன்
நிர்வாகத் தயாரிப்பாளர்: டி சக்திவேல் ஒளிப்பதிவு: ராம் டி சந்தர்
VFX மேற்பார்வையாளர்: அகஸ்டின் பிரபு.
எடிட்டர்: கார்த்திக் செல்வம்
மக்கள் தொடர்பு : ஏ ராஜா

Latest articles

காமெடி படங்களுக்கு தனி வரவேற்பு உண்டு என்பதை மனதில் வைத்து இந்த படத்தை உருவாக்கியுள்ளோம்! -‘கொஞ்சநாள் பொறு தலைவா’ படத்தின் டிரெயலர் வெளியீட்டு விழாவில் ஆருத்ரன் பிக்சர்ஸ் கலியமூர்த்தி பேச்சு

அறிமுக இயக்குநர் விக்னேஷ் பாண்டியன் இயக்கத்தில், ஆருத்ரன் பிக்சர்ஸ் எஸ் முருகன் தயாரிப்பில், கமர்ஷியல் எண்டர்டெயினராக உருவாகியுள்ள 'கொஞ்ச...

ராணுவ வீரரின் காதல் கதையில் உருவாகும் ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ படத்துக்கு கார்த்திக் ராஜாவின் பின்னணி இசை!

அனுராதா அன்பரசுவின் ஏஏஏ பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.' இந்தப் படத்திற்கு கார்த்திக் ராஜா பின்னணி இசையமைத்தால்...

தி டோர் சினிமா விமர்சனம்

ஹாரர் சப்ஜெக்டில், கதாநாயகிக்கு முக்கியத்துவம் தருகிற கதையம்சத்தில் உருவாகியுள்ள படம். இளம்பெண் மித்ரா பேய் பிசாசு என எதையும் நம்பாதவர்....

‘ஓம் காளி ஜெய் காளி’ வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடலில் கிடைத்த அமோக வரவேற்பு… உற்சாகத்தில் படக்குழு!

  விமல் நடித்துள்ள 'ஓம் காளி ஜெய் காளி' வெப்சீரிஸின் சிறப்புத் திரையிடல் சென்னையில் நடந்தது. அதையடுத்து படத்துக்கு அற்புதமான...

More like this