சமூகத்தின் ஏற்றத்தாழ்வுகளையும், மனிதனுக்கான சம உரிமைகளையும் உரக்கப்பேசும் அழகான கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘சீரன்.’ அறிமுக இயக்குநர் துரை கே முருகன் இயக்கத்தில், ஜேம்ஸ் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இந்த படத்தை ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
தன் வாழ்வில் சந்தித்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில், கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார் ஜேம்ஸ் கார்த்திக்.
படத்தில் இனியா, சோனியா அகர்வால், ஆடுகளம் நரேன், சூப்பர் சிங்கர் ஆஜித், க்ரிஷா குரூப், சென்ட்ராயன், ஆர்யன், அருந்ததி நாயர் உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படப்பிடிப்பு வேலூர், காஞ்சிபுரம், செய்யாறு கிராமப்புற பகுதிகளில் நடந்து நிறைவடைந்து, படம் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் தெரியவரும்.
”இந்த படம் நம் சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளை மையம் தான் கதை. ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட தம்பதியின் மகன் மறுக்கப்பட்ட தன் தந்தையின் உரிமைக்காக போராடுவதுதான் கதை. அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான அம்சங்களுடன், அருமையான கருத்தை பேசும் சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது” என்கிறார் படத்தின் இயக்குநர்.
படக்குழு:-
தயாரிப்பு: ஜேம்ஸ் கார்த்திக், எம்.நியாஸ், இயக்குநர் துரை கே முருகன்
ஒளிப்பதிவு : பாஸ்கர் ஆறுமுகம்
இசை: அரவிந்த் ஜெரால்ட் & ஏ கே சசிதரன்
பின்னணி இசை: ஜூபின்
எடிட்டர்: ஏ.ரஞ்சித் குமார்
கலை இயக்குனர்: எஸ்.அய்யப்பன்
பாடலாசிரியர்: சினேகன், கு.கார்த்திக்
நடன இயக்குநர்: பாபா பாஸ்கர்
சண்டைக்காட்சி: டி.ரமேஷ்
மக்கள் தொடர்பு: வேலு