மெகா சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ் ‘விருபாக்ஷா’, ‘ப்ரோ’ ஆகிய படங்களின் பிளாக்பஸ்டர் வசூல் வேட்டைகளைத் தொடர்ந்து அடுத்த படத்தை துவங்கியுள்ளார்.
அறிமுக இயக்குநர் ரோஹித் கேபி இப்படத்தை இயக்குகிறார். இந்த அதிரடி, பீரியட் ஆக்சன் படத்தில் சாய் துர்கா தேஜ் சக்திவாய்ந்த பாத்திரத்தை ஏற்று நடிக்கவுள்ளார்.
தற்காலிகமாக ‘SDT18’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் அறிமுக போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கண்ணிவெடிகளால் சூழப்பட்ட ஒரு பாலைவனத்தின் மத்தியில் தனித்த பச்சை மரத்தைக் கொண்டுள்ள போஸ்டர், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தை பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில், கே.நிரஞ்சன் ரெட்டி, சைதன்யா ரெட்டி ஆகியோர் படத்தை பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.
முதல் ஷெட்யூலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட பிரமாண்ட செட்டில், தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது.
படத்தை தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிடத் திட்டமிடுகின்றனர்.

