Thursday, January 23, 2025
spot_img
HomeCinemaவரலட்சுமி சரத்குமாரின் பான் இந்திய திரைப்படம் ‘சபரி’ மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

வரலட்சுமி சரத்குமாரின் பான் இந்திய திரைப்படம் ‘சபரி’ மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

Published on

வரலட்சுமி சரத்குமார் கதையின் நாயகியாக நடிக்க, அறிமுக இயக்குநர் அனில் காட்ஸ் இயக்கத்தில் பான் இந்தியா படைப்பாக உருவாகியுள்ள படம் ‘சபரி.’

இந்த படத்தில் கணேஷ் வெங்கட்ராமன், ஷஷாங்க், மைம் கோபி, சுனயனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி, விவா ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ணதேஜா, பிந்து பகிடிமரி, அஸ்ரிதா வேமுகந்தி, ஹர்ஷினி கொடுரு, அர்ச்சனா பாபி நீவே ஆனந்த், பிரமோத் ஆனந்த், சிறுமி கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள்.

இந்த படம் வரும் மே மாதம் 3-ம் தேதி தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் மகேந்திரநாத் கோண்ட்லா பேசியபோது, ”இந்த படம் புதுமையான கதை மற்றும் திரைக்கதையுடன் உருவாகியிருக்கிறது. வலுவான கதைக்களத்தோடு உணர்வுப்பூர்வமான மற்றும் விறுவிறுப்பான திரில்லர் காட்சிகள் ரசிகர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும்.

நடிகை வரலட்சுமி சரத்குமார் இதுவரை நடித்திராத மாறுபட்ட வேடத்தில் நடித்திருப்பதோடு, தனது நடிப்பு மூலம் ரசிகர்களை நிச்சயம் வியப்பில் ஆழ்த்துவார். தெலுங்கு மற்றும் தமிழ் பதிப்புகளின் இறுதிப் பிரதிகளைப் பார்த்தவர்கள் படம் மிக சிறப்பாக வந்திருப்பதாக கூறியது, எங்களுக்கு மகிழ்ச்சியளித்திருக்கிறது. பிற மொழி டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ‘வேர்ல்ட் ஆஃப் சபரி’ முன்னோட்ட வீடியோவுக்கு கிடைத்த வரவேற்பு எங்கள் படக்குழுவினருக்கு பெரும் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது” என்றார்.

படக்குழு:
தயாரிப்பு – மஹா மூவிஸ் மகேந்திரநாத் கோண்ட்லா
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அனில் காட்ஸ்
இணை இயக்குநர் – வம்சி
இணை எழுத்தாளர் – சன்னி நாகபாபு
ஒளிப்பதிவு – ராகுல் ஸ்ரீவத்சவா, நானி சமிடி ஷெட்டி
இசை : கோபி சுந்தர்
பாடல்கள் – ரஹ்மான், மிட்டபள்ளி சுரேந்தர்
படத்தொகுப்பு – தர்மேந்திர ககரலா
கலை இயக்குநர் – ஆஷிஷ் தேஜா பூலாலா
நடன இயக்குநர்கள் – சுசித்ரா சந்திர போஸ், ராஜ் கிருஷ்ணா
ஸ்டண்ட் இயக்குநர் – நந்து-நூர்
ஒப்பனை – சித்தூர் ஸ்ரீனு
ஆடைகள் – ஐயப்பா
ஆடை வடிவமைப்பாளர் – மானசா
புகைப்படக்கலைஞர் – ஈஸ்வர்
தயாரிப்பு நிர்வாகி – லட்சுமிபதி காந்திபுடி
நிர்வாக தயாரிப்பாளர் – சீதாராமராஜு மல்லேலா
மக்கள் தொடர்பு: புலகம் சின்னராயனா,
தமிழில் மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா

Latest articles

சீயான் விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன் பார்ட் 2’ மார்ச் 27-ம் தேதி வெளியாகிறது!

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக அதிரடி ஆக்சன் வேடத்தில் நடித்திருக்கும் ' வீர தீர சூரன் - பார்ட்...

குடும்பஸ்தன் படத்தின் கதை ரசிகர்கள் தங்களை பொருத்திப் பார்த்துக்கொள்ளும் விதத்தில் இருக்கும்! -நடிகர் மணிகண்டன்

ஒரு படம் வெற்றியடைந்தால் அந்தப் படத்தின் பெயர் நடிகரின் பெயரோடு சேர்வது வழக்கம். இது நடிகர் மணிகண்டணின் ஒவ்வொரு...

ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக்கை வெளியிட்டது டிஸ்னி+ ஹாட்ஸ்டார்!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ்...

’குடும்பஸ்தன்’ உங்களை சிரிக்க வைத்து,மனஅழுத்தத்தைக் குறைக்கும்! -இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி

மணிகண்டன் நடித்து வெளியான ’குட்நைட்’, ‘லவ்வர்’ படங்களின் அடுத்தடுத்த வெற்றியையடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக 'குடும்பஸ்தன்' உருவாகியுள்ளது. இந்தப் படம்...

More like this