Tuesday, April 22, 2025
spot_img
HomeGeneralஜார்கண்ட் மாநில ஆளுநர் பங்கேற்ற, ‘நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி' நூல் வெளியீட்டு விழா! எஸ்.ஆர்.எம்....

ஜார்கண்ட் மாநில ஆளுநர் பங்கேற்ற, ‘நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி’ நூல் வெளியீட்டு விழா! எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத்தில் உற்சாகம்!!

Published on

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுடபக் கல்வி நிறுவனம் சார்பில் பாரிவேந்தர் மாணவர் தமிழ்மன்றம் சார்பில் தமிழ்ப்பேராயம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்ப்பேராயத்தின் தலைவர் எழுதிய நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி என்ற தலைப்பில் புதிய நூல் வெளியிட்டு விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனரும், பெரம்பலூர் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுனர் சி.பி. இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் கல்லூரியின் துணை வேந்தர் முத்தமிழ் செல்வன், தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு. நாகராசன், எஸ்.ஆர்.எம் கல்லூரி வளாக நிர்வாகி அருணாச்சலம், உதவிப் பேராசிரியர் பாலசுப்பிரமணி உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் துவக்கமாக இன்று சுதந்திர போராட்டத்தில் உயிர்நீத்த கொடிக்காத்த குமரன், சுப்பிரமணிய சுவாமி ஆகியோரின் பிறந்த நாள் தினத்தை யொட்டி இரண்டு தியாகிகளின் திருவுருவ படத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின் பேராசிரியர் கரு.நாகராசன் எழுதிய நம்பிக்கை நாயகர் நரேந்திரமோடி என்ற புதிய காவிய புத்தகத்தை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி. இராதாகிருஷ்ணன வெளியிட்டார்.

தொடர்ந்து எஸ்.ஆர்.எம் பல்கலைகழகத்தின் நிறுவனர் பாரிவேந்தர் பேசும்போது, ”தமிழ்ப்பேராயத்தின் தலைவர் கரு.நாகராசன் தமிழ் இலக்கியத்தை கொண்டு புதிய புதிய புத்தகங்களை எழுதி உள்ளார். இதுவரையில் 75 புத்தகங்களை எழுதி அர்ப்பணைத்துள்ளார்.

தமிழ்ப்பேராயத்தின் பெரும் ஆக்கத்தினை கொண்டவர். பல புத்தகங்களை இவர் எழுதி இருந்தாலும் 75வதாக எழுதிய இந்த புத்தகம் காவியமாக்கியது. இந்த புத்தகத்தில் மோடி அவர்களின் பல திட்டங்களை வெளிபடுத்தியுள்ளது. மேலும் இந்த புத்தகத்தை சரியான நேரத்தில் வெளியிட்டது சரியான தருணம் என்பது மிக்க மகிழ்சியாக உள்ளது. பெரும்பாலும் மக்கள் புதிய புதிய நூல்களை விரும்பி படிப்பதற்க்கு காரணம் காவிய நாயகர்களின் வரலாறு, கவிதை போன்றவைகளை அந்த வகையில் தான் இந்த புத்தகமும் அமைந்துள்ளது.

தமிழ்ப்பேராயத்தின் சார்பில் ஆண்டுதோறும் புதிய நூல்களை வெளியிடுவதற்காக சுமார் 20லட்சம் வழங்கபட்டு வருகிறது. இதனால் தமிழ்ப்பேராயத்தின் பெருமை உலகெங்கிலும் பேசப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் எஸ்.ஆர்.எம் கல்லூரியில் தமிழ்ப்பேராயத்தின் மூலம் வெற்றி பெற்றவர்கள் தேசிய அளவில் நூல்களை வெளியிட்டவர்களாக உள்ளனர். இந்த நாட்டில் உள்ள 10கோடி பேர் தலை நிமிர்ந்து உள்ளார்கள் என்றால் அதற்க்கு காரணம் மோடி அவர்கள் தான், அவர் எங்கு சென்றாலும் தமிழ் பெருமையை பற்றி பேசுவார். ஒரு நாட்டின் மன்னன் சிறப்பாக ஆட்சி செய்தால் அதற்க்கு பரிசாக செங்கோல் வழங்கி கெளரவிப்பார்கள் அந்த வகையில் இந்த நாட்டை திறமையாக ஆண்டு வருவதால் புதிய பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. எந்த உலகத்திலும் இல்லாத சாதனை நமது இந்தியாவிற்க்கு உண்டு அதில் பாராளுமன்றத்தில் தமிழ் பேசியது சாதனையாக உள்ளது.

மோடி அவர்கள் கொண்டுவந்துள்ள பல திட்டங்கள், சாதனைகளை உலக தலைவர்கள் போற்றும் வகையில் அமைந்துள்ளது” என்றவர், தமிழின் வளர்ச்சிக்காக பல புத்தகங்களை வெளியிட வேண்டுமென கரு.நாகராசன் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின் ஜார்கண்ட் மாநிலத்தின் ஆளுநர் சி.பி. இராதா கிருஷ்ணன் பேசும்போது, ”ஒரு குடும்பத்தின் தலைவர் எப்படியோ அப்படியே அந்த குடும்பமும் அமைப்பும், அதேபோல இந்த நாட்டின் தலைவரும் அனைத்திலும் சாதனை படைத்தவராகவே உள்ளார். நாட்டின் வளர்ச்சிக்கும், மக்களின் வளர்ச்சிக்கும் பல திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்தி உள்ளார். கொரோனா காலத்தில் மக்களின் நலனுக்காக தடுப்பூசிகளை கையாளுவதில் சிறப்பாக செயல்பட்டார். நமது நாட்டு மக்களுக்கு மட்டும் இல்லாமல் பல நாட்டு மக்களுக்கும் தடுப்பூசிகளை வழங்கினார். கொரோனாவை கட்டுபடுத்துவதற்க்கான செயல்முறைகளையும், திட்டங்களையும் உலக நாட்டு தலைவர்கள் மோடியிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டனர். கொரோனா தடுப்பதற்காக தடுப்பூசி அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக வழங்கி சாதனை செய்து உள்ளார். நான் ஜார்கண்ட் மாநிலத்தில் பொறுப்பேற்பதற்கு முன்பு அம்மாநிலத்தில் சுத்தமான குடிநீர் 8சதவீதம் மட்டுமே கிடைத்தது அதன்பிறகு ஜல்சக்தி திட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளில் 28சதவீதம் குடிநீர் கிடைத்துள்ளது. இன்னும் மூன்று ஆண்டுகளில் முழுமையாக அனைவரும் குடிநீர் வழங்க உள்ளோம்” என்றார்.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
error: Content is protected !!