லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா இதுவரை பார்த்திராத அதிரடி ஆக்சன் அவதாரம் எடுக்கவுள்ள ‘ராக்காயி’ படத்தின் டைட்டில் லுக் டீசர், நயன்தாரா பிறந்த நாளை கொண்டாடும் விதமாக கடந்த அக்டோபர் 18 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தற்போது டீசர் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
புதுமையான கதைக்களத்தில், பரபரப்பான திரைக்கதையுடன், ப்ரீயட் ஆக்சன் டிரமாவாக உருவாகவுள்ள இப்படத்தை, அறிமுக இயக்குநர் செந்தில் நல்லசாமி இயக்கவுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் ஆண்டனி எடிட்டராக பணியாற்றவுள்ளார்.
படத்தை பெரும் பொருட்செலவில் டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்சன், மூவி வெர்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.