இன்று ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம் செண்பகமூர்த்தியின் பிறந்தநாள். அதை முன்னிட்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துகளை பெற்றார்.
பின்னர் நடந்த பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர்கள் ஆர்யா, சூரி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் அர்ஜுன் துரை, லைகா புரொடக்சன்ஸ் தலைமை நிர்வாகி ஜி கே எம் தமிழ்க் குமரன், தயாரிப்பாளர் ரோமியோ பிக்சர்ஸ் ராகுல், டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன், இயக்குநர் நடிகர் சந்தோஷ் பி ஜெயகுமார், நடிகை பிரியாலயா, தயாரிப்பாளர் தாய் சரவணன், சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன், தயாரிப்பாளர் கமல் நயன், தயாரிப்பாளர் குமார், தயாரிப்பாளர் கே வி துரை, விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.