முன்னாள் இந்திய குடியரசு தலைவர் அப்துல் கலாமை தனது ரோல் மாடலாக கொண்டிருக்கும் ஆட்டோ ஓட்டுநர், தன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் காரணமாக இளம் வயது அப்துல் கலாமை சந்திக்கிறார். அதன்பின் ஆட்டோ ஓட்டுநர் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பம் மற்றும் அடுத்தடுத்த சம்பவங்கள் கலகலப்பாகவும், பொழுதுபோக்காகவும் செல்கிறது.
இது ஸ்டோரிஸ் பை தி ஷோர் சார்பில் அனிருத் வல்லப் தயாரிக்கும் ஃபேன்டஸி என்டர்டெயினர் படைப்பான ‘ராக்கெட் டிரைவர்’ படத்தின் கதைச்சுருக்கம்.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதையடுத்து படத்தின் டிரைலரை நடிகர் சிலம்பரசன் டி.ஆர் வெளியிட்டார். இது திரையுலகினர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் கதையை அக்ஷய் பூல்லா, பிரசாந்த் எஸ் மற்றும் ஸ்ரீராம் ஆனந்தசங்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்தப் படத்தை ஸ்ரீராம் ஆனந்தசங்கர் இயக்குகிறார்.
தனித்துவ கதையம்சம் சார்ந்த பொழுதுபோக்கு படங்கள் மொழி எல்லைகளை கடந்த நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வரிசையில், ‘ராக்கெட் டிரைவர்’ புதிய படமாக இணையும் என்று எதிர்பார்க்கலாம்.