HomeCinemaஅருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த 'தி கிங் மேக்கர்' ஆவணப்படம் இளையராஜாவின் பங்களிப்போடு தயாராகிறது!

அருளாளர் ஆர் எம் வீரப்பன் குறித்த ‘தி கிங் மேக்கர்’ ஆவணப்படம் இளையராஜாவின் பங்களிப்போடு தயாராகிறது!

Published on

சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவர் மற்றும் சத்யா மூவிஸ் நிறுவனத்தின் திரைப்படத் தயாரிப்பாளர், தமிழகத்தின் வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த அருளாளர் ஆர்.எம். வீரப்பன் குறித்த ஆவணப்படம், திரையுலகத்தின் முன்னணி பிரபலங்களின் பங்கேற்பில், உலகத்தரத்திற்கு இணையாக உருவாகவுள்ளது.

திராவிட இயக்கங்களின் தலைவர்களான பெரியார் மற்றும் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆர்.எம். வீரப்பன். திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருந்த ஆர்.எம். வீரப்பன், திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். பிரிந்தபோது அதிமுகவில் இணைந்தார்.

முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 5 முறை அமைச்சராக பதவி வகித்தார்.

மூன்று முறை சட்டப்பேரவை மேலவை உறுப்பினராகவும், இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார் அருளாளர் ஆர்.எம். வீரப்பன்.
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் 1977 முதல் 1996 வரையிலான காலகட்டத்தில் 5 முறை தமிழக அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

தமிழ் திரைத்துறையில் 20 க்குமேற்பட்ட படங்களைத் தயாரித்துள்ளார், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடிப்பில் தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்ஷாகாரன், இதயக்கனி மற்றும் ரஜினி நடிப்பில் மூன்றுமுகம், பட்ஷா முதலாக பல ப்ளாக்பஸ்டர் படங்களை வழங்கியுள்ளார்.

தமிழகத்தின் வரலாற்றில் இடம்பிடித்த ஆளுமையான அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறையினர் மற்றும் வருங்கால சந்ததியினர் முழுமையாக தெரிந்து கொள்ளும் வகையில், உலகத்தரத்தில் ஒரு ஆவணப்படம் உருவாகவுள்ளது.

சத்யா மூவிஸ் தங்கராஜ் தயாரிக்கவுள்ள இந்த ஆவணப்படம் இயக்குனர், தயாரிப்பாளர் பதம் வேணு குமார் மேற்பார்வையில் உருவாகிறது. ஏற்கனவே அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு நினைவு பாடல் ஒன்றை சத்யா மூவிஸ் தயாரித்து செப்டம்பர் 9 ஆம் தேதி வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்கள், மற்றும் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பலரும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்று, அருளாளர் ஆர் எம் வீரப்பன் அவர்களுடனான நினைவுகளையும் அவரைப்பற்றிய தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவுள்ளனர்.

இதன் முதற்கட்டமாக தயாரிப்பாளர் சத்யா மூவிஸ் தங்கராஜ் மற்றும் ஆவணப்படதின் மேற்பார்வையாளர் பதம் வேணு குமார் ஆகியோர் இசைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்து உரையாடினர். இந்த ஆவணப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா தானும் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.

இந்த ஆவணப்படம் குறித்த மற்ற விவரங்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

Latest articles

பிரபல இயக்குநர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்ட ‘வாரண்ட்’ சீரிஸ் டிரெய்லர் வெளியீட்டு விழா!

விலங்கு சீரிஸ், மாமன் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள வாரண்ட்...

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் நடிகை ஶ்ரீலீலா,  சென்னைஸ் அமிர்தா ஏவியேஷன் கல்லூரியை பார்வையிட்டு, மாணவர்களுடன் கலந்துரையாடி உற்சாகமூட்டினார்.

சென்னைஸ் அமிர்தா கல்லூரியின்  உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை பார்த்து அவர் பாராட்டு தெரிவித்தார்.   விமான நிலையம் போன்ற நிஜ...

விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாளில் வெளியான ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தின் ஸ்பெஷல் போஸ்டர்!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரின் கீழ், தில் ராஜூ மற்றும் ஷிரீஷ் தயாரிப்பில், ரவி கிரண் கோலா இயக்கத்தில்,...

29 சினிமா விமர்சனம்

தன் காதலன் தன்னையே சுற்றிக் கொண்டிருப்பதால் வெறுத்துப் போகும் காதலி பிரேக் அப் முடிவெடுக்கிறாள். வெறுக்கிற அளவுக்கு அவன்...

More like this