சமுத்திரக்கனி அப்பாவாக நடிக்க, தெலுங்கு நடிகர் தன்ராஜ் மகனாக நடித்து இயக்கியிருக்கும் ‘ராமம் ராகவம்’ படம் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. விரைவில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கிறது.
அப்பா மகன் உறவை சொல்லும் படமாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் கொலசாமிபோல பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
சமீபத்தில் தெலுங்கு திரையுலகைச் சார்ந்த சிலர் ராமம்ராகவம் படத்தை பார்த்தனர். அவர்கள் சமூகத்திற்கு அவசியமான அதே சமயம் கலகலப்பான குடும்ப காவியம் என குறிப்பிட்டு படத்தையும் சமுத்திரக்கனியையும் இயக்குநர் தன்ராஜையும் வெகுவாக பாராட்டியிருக்கிறார்கள்.