கதையின் நாயகனாக விக்னேஷ், கதாநாயகியாக மனிஷா ஜஷ்னானி நடிக்கும் படம் ‘RED FLOWER.’
ஆக்ஷன் த்ரில்லர் சப்ஜெக்டில் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கியுள்ள இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நாசர், ஒய்.ஜி.மகேந்திரன், சுரேஷ் மேனன், ஜான் விஜய், அஜய் ரத்தினம், லீலா சாம்சன், டி.எம்.கார்த்திக், கோபி கண்ணதாசன், தலைவாசல் விஜய், மோகன் ராம், யோக் ஜேபி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் புதிய போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார். போஸ்டர் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரிலிருக்கும் அவரது அவரது தோற்றம் படம் குறித்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. காதலுக்கு விருந்தாக இருக்கும் என உறுதியளிக்கிறது. விக்னேஷை மீண்டும் ஒரு முறை பெரிய திரையில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டியுள்ளது.
படம் பற்றி விக்னேஷிடம் கேட்டபோது, ”காலத்தால் அழியாத காதலை சமகாலக்கூறுகளுடன் கலக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்தப் படம் அனைத்து வயதினரையும் கவர்ந்திழுக்கும் என்று நம்புகிறோம்” என்றார்.
இயக்குநரிடம் பேசியபோது, ”பிரமாண்டமான பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த ஆக்சன் த்ரில்லர் படம், இதுவரை இந்திய சினிமாவில் பேசப்படாத புதிய விஷயங்களை பேசும்” என்றார்.
படக்குழு:-
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: ஆண்ட்ரூ பாண்டியன்
தயாரிப்பு: ‘ஸ்ரீ காளிகாம்பாள் பிக்சர்ஸ்’ கே.மாணிக்கம்
ஒளிப்பதிவு: கே.தேவசூர்யா
இசை: சந்தோஷ் ராம்
படத்தொகுப்பு: அரவிந்தன் ஆறுமுகம்
மக்கள் தொடர்பு: ஷேக்