Thursday, July 18, 2024
spot_img
HomeCinema'பன் பட்டர் ஜாம்' படம் மூலம் ஹீரோவாகிறார் பிக்பாஸ் ராஜு! பரபரப்பாக நடக்கிறது படப்பிடிப்பு.

‘பன் பட்டர் ஜாம்’ படம் மூலம் ஹீரோவாகிறார் பிக்பாஸ் ராஜு! பரபரப்பாக நடக்கிறது படப்பிடிப்பு.

Published on

‘பன் பட்டர் ஜாம்’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார் பிக்பாஸ் ராஜு. இறந்தகால வலிகளின் சுமைகளுக்கும், எதிர்காலத்தைப் பற்றிய பயங்களுக்கும் நடுவே ஊசலாடாமல், நிதானமாக நின்று நிகழ்காலத்தை புன்னகையோடு எதிர்கொள்ள கற்றுக்கொள்ளும் Gen Z இளைஞர்களைப் பற்றியதே இந்த படத்தின் கதை.

ஒருவனை சுற்றி எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், அந்தந்த கணத்தை முழுமையாக வாழப் பழகினால், கொண்டாட்டங்களுக்கு குறைவில்லை என்கிற பாசிட்டிவிவான கருத்தை பரபரப்பாகவும், முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பச் சொல்லும் வகையிலும், இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

பிக்பாஸ் ராஜுவுடன், ஆதியா பிரசாத், பவ்யா திரிகா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி, மைக்கேல் தங்கதுரை, விஜே பப்பு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

‘காலங்களில் அவள் வசந்தம்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான மிர்தாத், இரண்டாவது படமாக இந்த படத்தை இயக்குகிறார். ‘சைஸ் ஜீரோ’ படத்திற்கு வசனமும், தேசியவிருது வென்ற ‘பாரம்’ படத்திற்கு திரைக்கதை வசனமும் எழுதியவர் இவர்.

வரும் ஜூலை 8-ம் தேதி இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகிறது.

இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவான இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.

படக்குழு:-

தயாரிப்பு நிறுவனம் : Rain Of Arrows Entertainment
எழுத்து , இயக்கம் : ராகவ் மிர்தாத்
இசை: நிவாஸ் கே பிரசன்னா
ஒளிப்பதிவு : பாபு குமார் ஐ இ
எடிட்டிங்: ஜான் ஆபிரகாம்
கலை இயக்குநர் : ஸ்ரீ சசிகுமார்
பாடல்கள்: கார்த்திக் நேதா, உமா தேவி, மோகன் ராஜா, சரஸ்வதி மேனன்
நடனம்: பாபி
நிர்வாக தயாரிப்பு : எம்.ஜெ.பாரதி
மக்கள் தொடர்பு : ஜான்சன்

Latest articles

சூரி நடிப்பில் வெற்றி மாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 2’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சூரி, விஜய் சேதுபதி நடிக்க, வெற்றிமாறன் இயக்கிய ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில்...

Health Minister Ma. Subramanian Inaugurates SPROUT, Saveetha Medical College Hospital’s New Fertility Centre

Thiru K. Selvaperunthagai, President of Tamilnadu Congress Committee member of Legislative Assembly, Sriperumbudur constituency...

நலத்திட்ட உதவிகளோடு நடிகர் விஷ்ணு விஷால் பிறந்த நாளை கொண்டாடிய ரசிகர்கள் !!

இன்று (ஜூலை 17) நடிகர் விஷ்ணு விஷாலின் பிறந்த நாள். அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது...

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் தீபாவளியன்று ரிலீஸாகிறது!

சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன்' வரும் அக்டோபர் 31; 2024 தீபாவளியன்று உலகமெங்கும் வெளியாகிறது. படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்திய...

More like this