Friday, April 25, 2025
spot_img
HomeCinemaஅர்ஜுன்தாஸ் நடிப்பில், மெளனகுரு சாந்தகுமார் இயக்கிய 'ரசவாதி' மே 10-ல் ரிலீஸ்!

அர்ஜுன்தாஸ் நடிப்பில், மெளனகுரு சாந்தகுமார் இயக்கிய ‘ரசவாதி’ மே 10-ல் ரிலீஸ்!

Published on

இயக்குநர் சாந்தகுமார் ‘மௌனகுரு’, ‘மகாமுனி’ படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். அவரது இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் லவ் ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் திரைப்படமான ’ரசவாதி – தி  அல்கெமிஸ்ட்‘  மே 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.

அதையொட்டி வெளியான புதிய டிரெய்லர் பலரையும் கவர்ந்துள்ளது. நடிகர் கார்த்தி, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

படத்தில் அர்ஜுன் தாஸோடு, தன்யா ரவிச்சந்திரன், ரம்யா சுப்ரமணியன், ஜி.எம். சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

காட்சிகள் கொடைக்கானல், மதுரை, கடலுார், பழனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டது. ரசவாதி என்பது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் கண்முன் கொண்டு வரக்கூடிய விஷயம். கொடைக்கானலில் நிகழ்கால கதை நடக்கும். உறவுகளை மையமாக வைத்து காதல், கோபம், பழிவாங்கல், இழப்பு என பல்வேறு உணர்வுகளை படம் கடந்து செல்கிறது.

படம் குறித்து இயக்குநர் சாந்தகுமார் பேசியபோது, ”கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்த சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியை சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்கு தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார். இதுதான் கதை” என்றார்.

கதையம்சமுள்ள படங்களை தொடர்ச்சியாக வெளியிடுகிற ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ சக்திவேலன் இந்த படத்தை வெளியிடவிருக்கிறார்.

திரைப்பட ஆர்வலர்களைக் கவரும் வகையில் தீவிர உணர்ச்சிகளையும், யதார்த்தங்களையும் தன்னுடைய திரைமொழியில் திறமையாகக் கையாள்பவர் இயக்குநர் சாந்தகுமார். அவர் இயக்கத்தில் வெளியான ‘மௌன குரு’ மற்றும் ‘மகாமுனி’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் தமிழ் ரசிகர்களைத் தாண்டி பல மொழிப் பார்வையாளர்களையும் ஈர்த்தது. அவர் இயக்குநராக அறிமுகமான ‘மௌன குரு’ படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது மற்றும் கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் ரீமேக் ஆனது. அவரது இரண்டாவது வெளியீடான ‘மகாமுனி’ 30 சர்வதேச விருதுகளுடன் 24 விருதுகளை ‘சிறந்த இயக்குநரு’க்காக வென்றது. இந்த படத்தில் இருந்து பல வசனங்கள் சமூக வலைதளங்களிலும் வைரலானது.

படக்குழு:
தயாரிப்பு: டிஎன்ஏ மெக்கானிக் கம்பெனி (இயக்குநர் சாந்தகுமாரின் சொந்த தயாரிப்பு நிறுவனம்)
நிர்வாகத் தயாரிப்பாளர்: எஸ் பிரேம்
இசை: எஸ்.எஸ்.தமன்
பாடல் வரிகள்: யுகபாரதி
ஒளிப்பதிவு: சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார்
எடிட்டிங்: வி.ஜே. சாபு ஜோசப்
நடன அமைப்பு: சதீஷ் கிருஷ்ணன்
கலை: சிவராஜ்
ஒலி எஃபெக்ட்ஸ்: சேது
ஒலிக்கலவை: தபஸ் நாயக்
ஸ்டன்ட்: ஆக்‌ஷன் பிரகாஷ்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா

Latest articles

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம். போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள்...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

More like this

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம். போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள்...
error: Content is protected !!