Monday, May 12, 2025
spot_img
HomeCinemaநடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்!

நடிகர் ராம்சரணுக்கு டாக்டர் பட்டம் வழங்கும் வேல்ஸ் பல்கலைக்கழகம்!

Published on

நடிகர் ராம் சரண் மெகா ஸ்டார் என மக்களால் கொண்டாடப்படும் நடிகர் சிரஞ்சீவி, சுரேகா சிரஞ்சீவி தம்பதிக்கு மகனாக 1985 ஆம் ஆண்டு மார்ச் 27 ஆம் தேதி பிறந்தார்.

புகழின் வெளிச்சம் தன் மகன் மீது படாமல் இருக்க ராம் சரணை சென்னையில் உள்ள பிரபல பள்ளி ஒன்றில் படிக்க வைத்தார். பள்ளிப்படிப்பை முடித்த கையோடு கல்லூரியில் சேர்ந்தார் ராம் சரண். கல்லூரி நாட்கள் தொட்டே திரைத்துறை மீது பேரார்வம் கொண்டிருந்தார்.

தன்னை தேர்ந்த நடிகராக மாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் குதிரையேற்றம், நடனம் உள்ளிட்டவற்றை கற்றுக்கொள்ள வேண்டும் என அனைத்தையும் நன்கு கற்றுத் தேர்ந்தார். திரு. ராம்சரண் அவர்கள் 2007 ஆம் ஆண்டு சிறுத்தை என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரை உலகில் அறிமுகமானார்.
அந்த திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

தொடர்ந்து ராஜமௌலி இயக்கத்தில் மகதீரா என்ற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் மாபெரும் வெற்றியை பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனமிட்டு அமர்ந்தார். நடிகர் என்றதோடு மட்டும் இல்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், சமூக சேவகர், தொழில் முனைவோர் என்று பல அவதாரங்களை எடுத்தார்.

2022 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் இந்தியாவை தாண்டி ஜப்பான் முதலான உலக நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மக்கள் மத்தியில் மெகா பவர் ஸ்டார் என்ற பட்டத்தோடு வலம் வந்தார்.

மகதீரா மற்றும் சிறுத்தை ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு பிலிம் பேர் மற்றும் காமதேனு விருதுகள் வழங்கப்பட்டன. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதும் நாட்டுக்கூத்துப் பாடலுக்கு ஆஸ்கர் விருதும் பெற்று உலகப்புகழ் அடைந்தார்.

போர்ப்ஸ் இதழின் சிறந்த 100 செலப்ரிட்டி பட்டியலில் இவரும் இடம்பிடித்தார். திரைத்துறையைத் தாண்டி சமூக சேவையில் தன் தந்தையுடன் இணைந்து பிற்படுத்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்காக செயல்பட்டார்.

ஐசரி கணேஷ் வேல்ஸ் பல்கலைக்கழகம்

ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர், குண்டூர் என பல மாவட்டங்களை தாண்டி தெலுங்கானா மாநிலம் வரை தொண்டு செய்ய தன்னார்வ அமைப்புகளை தொடங்கினார். இரத்ததான முகாம்கள் பலவற்றை நடத்தியுள்ளார். கொரோனா காலத்தில் மக்களுக்கு மிகவும் தேவையாக இருந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் வரை இலவசமாக தேவைப்படுவோருக்கு வழங்கியுள்ளார். திரைத்துறை, சமூகநலன் சார்ந்த பணி ஆகியவற்றில்அவரது சேவையைப் பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது.

Latest articles

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18- தேதி ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (Love Insurance Kompany) திரைப்படம் வரும் செப்டம்பர்...

சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன்… திரைப்பிரபலங்கள் 10 பேர் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

செந்தமிழன் சீமான், ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம்...

‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகம் இப்போது சென்னையில்… நடிகை தேவயானி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் திறந்து வைத்து உற்சாகம்!

‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகம் கடந்த 70 வருடங்களாக திருப்பதியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உணவகம் மற்றும் தங்கும்...

டிரெண்டிங் உடையில் அசத்தல் லுக்… பிரதீப் ரங்கநாதனின் ‘Dude’ படத்திலிருந்து நாயகி மமிதா பைஜுவின் கேரக்டர் லுக் வெளியானது!

யங் சென்சேஷன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்தப் பிறகு 'Dude' என்ற பான் இந்திய...

More like this

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியின் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ செப்டம்பர் 18- தேதி ரிலீஸ்!

பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' (Love Insurance Kompany) திரைப்படம் வரும் செப்டம்பர்...

சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன்… திரைப்பிரபலங்கள் 10 பேர் வெளியிட்ட ‘தர்மயுத்தம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

செந்தமிழன் சீமான், ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கும் படம்...

‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகம் இப்போது சென்னையில்… நடிகை தேவயானி, நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோர் திறந்து வைத்து உற்சாகம்!

‘திருப்பதி பீமாஸ்’ சைவ உணவகம் கடந்த 70 வருடங்களாக திருப்பதியின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. உணவகம் மற்றும் தங்கும்...
error: Content is protected !!