HomeCinemaதொழிலில் வெற்றி பெற்று 6லிருந்து 8 வருடங்களில் செல்வந்தராக உயர வழிகாட்டும் நடிகர் ரமேஷ் அரவிந்தின்...

தொழிலில் வெற்றி பெற்று 6லிருந்து 8 வருடங்களில் செல்வந்தராக உயர வழிகாட்டும் நடிகர் ரமேஷ் அரவிந்தின் ‘அன்புடன் ரமேஷ்’ நூல் சென்னை புத்தக காட்சியில் பரபரப்பான விற்பனை!

Published on

தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என சுமார் 150 திரைப்படங்களில் நடித்தவரும் திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்று பன்முகம் கொண்டவருமான ரமேஷ் அரவிந்த் ஊக்கமூட்டும் பேச்சாளர் மற்றும் எழுத்தாளரும் கூட!

கர்நாடகா முழுவதும் உள்ள பெருநிறுவனங்களின் பணியாளர்கள் மற்றும் உயர் பதவிகளில் உள்ளவர்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டும் பேச்சுக்கள், பயிற்சிகளை வழங்கி வரும் ரமேஷ் அரவிந்த், கல்வி, வாழ்க்கை, பணி, மற்றும் தொழிலில் வெற்றி பெறுவது குறித்த புத்தகங்களையும் எழுதி வருகிறார்.

அந்த வரிசையில் அவர் எழுதியுள்ள ‘அன்புடன் ரமேஷ்’ என்ற புத்தகம் சமீபத்தில் வெளியாகி சென்னை புத்தகக் கண்காட்சியில் தற்போது பரபரப்பாக விற்பனை ஆகி வருகிறது.

ரமேஷ் அரவிந்த் வழங்கிய ஊக்கமூட்டும் பேச்சுகளின் முக்கிய மற்றும் சுவாரஸ்யமான பகுதிகளின் தொகுப்பான இந்த புத்தகம், ‘ப்ரிதியிந்த ரமேஷ்’ என்ற பெயரில் கன்னடாவில் வெளியாகி ஆறே மாதங்களில் ஏழு பதிப்புகள் என பெரும் வெற்றி பெற்ற புத்தகத்தின் தமிழ் பதிப்பாகும். கே. நல்லதம்பி இதை சிறப்பான முறையில் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

சவன்னா பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த புத்தகம் அகநாழிகை அரங்குகளான 520 மற்றும் 521-ல் கிடைக்கும். மேலும் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் ஆகிய மின் வணிக தளங்களிலும் கிடைக்கும்.

புத்தகம் குறித்து பேசிய ரமேஷ் அரவிந்த், “ஒருவர் வாழ்க்கையிலும் தொழில் அல்லது பணியிலும் வெற்றி பெற்று செல்வந்தராக உயர‌ 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகும் என்று நம்பப்படுகிறது. ஆனால் சில மாற்றங்களை செயல்படுத்தி, வியூகங்கள் வகுத்து அதற்கு ஏற்ப உழைத்தால் 6 முதல் 8 ஆண்டுகளிலேயே இலக்குகளை அடைந்து விடலாம். இந்த மாற்றங்கள், வியூகங்கள் மற்றும் உழைப்பு குறித்தும், நேர்வழியில் விரைவில் வெற்றி பெறுவதற்கான சூட்சுமங்கள் குறித்தும் இந்த புத்தகத்தில் கூறியுள்ளேன்.

நம்முடன் பணியாற்றுபவர்களையும் நமது குடும்பத்தினரையும் நமது சிறு செயல்கள் மூலமே உற்சாகப்படுத்தி விடலாம். இதன் மூலம் நமது பணியிடத்திலும், வீட்டிலும் மகிழ்ச்சி நிலவும். இது குறித்தும் எனது சொந்த வாழ்க்கை அனுபவங்களில் இருந்து எடுத்துரைத்துள்ளேன்.

‘அன்புடன் ரமேஷ்’ புத்தகம் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு உதவிகரமாக இருக்கும் என்றும் திறமைகளை எப்போதும் உரிய முறையில் அங்கீகரிக்கும் தமிழக மக்கள் இந்த புத்தகத்தையும் வாங்கி, படித்து பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

Latest articles

‘டீகன்ஸ்ட்ரக்ட்’ (Deconstruct) நிறுவனத்தின் பிராண்ட் பார்ட்னர் ராக் ஸ்டார் அனிருத்!  

'டீகன்ஸ்ட்ரக்ட்' இசையமைப்பாளர் அனிருத்தை தனது அதிகார பூர்வமான பிராண்ட் பார்ட்னராக அறிவிக்கிறது. இணையதளத்தின் மூலம் இயல்பாக தூண்டப்பட்ட ஒரு கதை. நவீன...

தண்ணீருக்கடியில் 20 அடி ஆழத்தில் மொத்த சக்தியையும் பயன்படுத்திய ஆர்யா… ‘மிஸ்டர் X’ படத்தில் அதிரடி காட்சி!

நடிகர் ஆர்யா 'மிஸ்டர் X’ படத்திற்காக 20 அடி ஆழமுள்ள தண்ணீருக்கடியிலான அதிரடி காட்சியில் மொத்த சக்தியையும் பயன்படுத்தியிருக்கிறார். இதுபற்றி...

வீர அன்பரசு நடித்து இயக்கியுள்ள ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ தேர்தலுக்கு மறுநாள் ரிலீஸ்! 

வீர அன்பரசு கதையின் நாயகனாக நடித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி.'...

அஜித் – ஷாலினி நடித்த கமர்ஷியல் பிளாக்பஸ்டர் ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் ரீ ரிலீஸ்!

அஜித் குமாரின் 25வது திரைப்படமாகவும் அவரது கரியரில் முக்கிய திருப்புமுனையாகவும் அமைந்த இந்தப் படம் ஏப்ரல் 24 அன்று...

More like this