Monday, March 16, 2026
spot_img
HomeCinemaபிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ஆஸ்கருக்கு இணையான சர்வதேச விழாவின் முதல் இந்திய ஜூரியாக...

பிரபல ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ஆஸ்கருக்கு இணையான சர்வதேச விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமனம்!

Published on

ரவி கே சந்திரன் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’, ‘பிளாக்’, ‘மை நேம் இஸ் கான்’ உள்ளிட்ட மாபெரும் வெற்றி பெற்ற மற்றும் விருதுகளை குவித்த பன்மொழி திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

‘மை நேம் இஸ் கான்’ படத்தில் சிறப்பாக பணியாற்றியதற்காக 2010ம் ஆண்டில் எனர்கா கேமரிமேஜால் கோல்டன் ஃபிராக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்திய ஒளிப்பதிவாளர்.

கடந்த 40 வருடங்களாக ஒளிப்பதிவாளராக பணிபுரியும் அவர் தற்போது, ஆஸ்கருக்கு இணையாக கருதப்படும் சர்வதேச எனர்கா கேமரிமேஜ்’ விழாவின் முதல் இந்திய ஜூரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

‘கேமரிமேஜ்’ என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற திரைப்பட விழாவாகும். ஒளிப்பதிவு கலையை இது கொண்டாடுகிறது. உலகெங்கிலும் உள்ள திரை கலைஞர்களால் ஆஸ்கருக்கு சமமாக கருதப்படும் இந்த விழா, விருது பெறும் திரைப்படங்களையும் கலைஞர்களையும் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் செலுத்துவதற்காக புகழ் பெற்று விளங்குகிறது. மேலும், ஆஸ்கரை போல் இல்லாமல், குறிப்பிட்ட பிரிவுகளில் விருதுகளை வழங்கி திரைப்பட உருவாக்க கலை மீது தனக்குள்ள அர்ப்பணிப்பை இது பறைசாற்றுகிறது.

இந்த வருடத்தின் எனர்கா கேமரிமேஜ் விழா நவம்பர் 11 முதல் 18 வரை போலந்தில் உள்ள டோரன் நகரில் நடைபெறுகிறது. டேரன் அரோனோஃப்ஸ்கி, ரோஜர் டீக்கின்ஸ் மற்றும் ரால்ப் ஃபியன்னெஸ் உள்ளிட்ட சர்வதேச புகழ் பெற்ற பல கலைஞர்கள் இவ்விழாவுக்கு இதற்கு முன்னர் அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்விழாவின் 31வது பதிப்பில் ரவி கே சந்திரன் ஜூரியாக பங்காற்றுவார்.

ஐ எஸ் சி என்று அழைக்கப்படும் இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தையும் எனர்கா கேமரிமேஜ் விழாவில் ரவி கே சந்திரன் பிரதிநிதித்துவப்படுத்துவார். கேமரிமேஜ் ஜூரியாக மூத்த கலைஞர் ரவி கே சந்திரன் நியமிக்கப்பட்டிருப்பது இந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்திற்கு பெருமை என்று கருதப்படுகிறது. மேலும், இந்தியத் திரைப்படத் துறை சர்வதேச அரங்கில் அதற்குரிய அங்கீகாரத்தை பெறுவதற்கான ஒரு படியாகவும் இந்த நியமனம் பார்க்கப்படுகிறது.

ரவி கே சந்திரனுக்கு விருதுகள், பாராட்டுகள் மற்றும் அங்கீகாரங்கள் பிரபல புதிதல்ல. அவர் இதுவரை பெற்ற அங்கீகாரங்களுக்கு கூடுதல் பெருமை சேர்ப்பதோடு, நமது நாட்டுக்கும் பெருமை சேர்க்கும் விதத்திலும் இந்த நியமனம் அமைந்துள்ளது.

இதற்கிடையே, கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் இடம்பெற்றுள்ள ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்த காட்சிகள் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது!

Latest articles

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள 'ரூம் பாய்'...

More like this

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...
error: Content is protected !!