புதுயுகம் தொலைக்காட்சியில் 1000 எபிசோட்களை கடந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ‘ருசிக்கலாம் வாங்க’ நிகழ்ச்சி புத்தம் புதிய அரங்கில் புதுப்பொலிவுடன் ‘ருசிக்கலாம் வாங்க சீசன் – 2′ என்ற பெயரில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது.
ஆயிரம் எபிசோடுகளை தொகுத்து வழங்கிய மீனாட்சியே தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
பிரபல சமையல் கலைஞர் யோகாம்பாள் சுந்தர் பாரம்பரிய உணவு வகைகளை செய்து காட்ட, மற்ற முன்னணி சமையல் கலைஞர்கள் விதவிதமான சுவையில் சைவம், அசைவம் என புது வகையான உணவு வகைகளையும், பாஸ்ட் ஃபுட் உணவுகளையும் சமைத்துக் காட்டுகிறார்கள்.
சுவாரசியமான சமையல் குறிப்புகளும் அன்றாடம் உபயோகிக்கும் உணவு பொருட்களை பற்றிய இதுவரை அறியாத விஷயங்களையும் எடுத்துச் சொல்கிறார்கள்.