தெலுங்கு நடிகர் ராஜ்தருணின் பிறந்தநாளுக்கான சிறப்பு பரிசாக, அவர் தமிழில் அறிமுகமாகும் படத்தை விஜய் மில்டன் இயக்கவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ராஜ்தருண் உய்யாலா ஜம்பாலா படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வென்ற ராஜ் தருண், குமாரி 21F, சினிமா சூப்பிஸ்த மாமா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்தவர். தமிழில் அவர் அறிமுகமாகும் படத்துக்கு தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 5 என பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ராஜ்தருண் புதிய தோற்றத்திலும், வித்தியாசமான கதாபாத்திரத்திலும் ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறார்.
இந்த படத்தை கதை உள்ளடக்கம் மிக்க சினிமாவை வழங்கி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே பாராட்டுகளை பெற்றுள்ள ரஃப் நோட் புரொடக்ஷன் தயாரிக்கிறது.
படம் குறித்து பேசிய விஜய் மில்டன், “இந்த படம் எனக்கு மிக மிக நெருக்கமான ஒரு படம். கோலி சோடா பாணியை தொடர்ந்து- இது ஒரு சக்திவாய்ந்த, உணர்ச்சிமிக்க, உண்மையான கதையை கொண்டு வருகிறது . ராஜ் தருண் மிகவும் புத்துணர்ச்சியுடனும், இளமையாகவும் தோன்றுகிறார்; தமிழ் ரசிகர்களை அவருடைய நடிப்பு ஆச்சரியத்தில் ஆழ்த்தும் என எனக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.
படம் பற்றிய மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.