அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கி வரும், ‘ரெட்ட தல’ படத்திற்காக நடிகர் தனுஷ், சாம் சி எஸ் இசையில் அழகான பாடல் ஒன்றைப் பாடியுள்ளார்.
பாடலை வெளிநாட்டில் பல இடங்களில் மிக பிரமாண்டமாக படமாக்கியுள்ளனர். விரைவில் இந்த பாடலை லிரிகல் வீடியோவாக வெளிவரவுள்ளது.
தனுஷ் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள ‘இட்லி கடை’ படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், இந்த கூட்டணி மீண்டும் ரெட்ட தல படத்தில் இணைந்துள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்கள் எந்த வித ஈகோவும் இல்லாமல், இணைந்து பணியாற்றுவது ரசிகர்களிடையே பாராட்டுக்களைப் பெற்று வருகிறது.