சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தை பொன்ராம் இயக்குகிறார். புதுமுகம் தார்னிகா நாயகியாக நடிக்கிறார். காளி வெங்கட், முனீஷ்காந்த், கல்கி ராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் பொன்ராம் முதல் முறையாக கை கோர்த்துள்ளார்.
கலகலப்பும் விறுவிறுப்பும் நிறைந்த, நகைச்சுவையும் சண்டை காட்சிகளும் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் திருவிழாவாக உருவாகும் இந்த படத்தை பெரும் பொருட்செலவில் புதிய நிறுவனமான ஸ்டார் சினிமாஸ் பேனரில் முகேஷ் டி. செல்லையா தயாரிக்கிறார்.
படம் தேனி, ஆண்டிபட்டி, உசிலம்பட்டி சுற்றியுள்ள கிராமங்களையும், அங்கும் இருக்கும் மக்களின் வாழ்க்கையையும் மையப்படுத்தி உருவாகிறது. பொன்ராமுக்கே உரிய நகைச்சுவையும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் படத்தில் நிரம்பியிருக்கும். படப்பிடிப்பு தேனியில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘ரஜினி முருகன்’, ‘சீமராஜா’, ‘எம்ஜிஆர் மகன்’, ‘டிஎஸ்பி’ என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், சண்முகபாண்டியன், யுவன் ஷங்கர் ராஜா என பிரமாண்ட கூட்டணியை அமைத்துள்ளார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு: பாலசுப்ரமணியம்
கலை இயக்கம்: சரவண அபிராமன்
உடைகள் அணிவகுப்பு: மீனாக்ஷி நாராயணசாமி
பாடல்கள்: சினேகன், யுகபாரதி
சண்டைப் பயிற்சி: ஃபீனிக்ஸ் பிரபு
படதொகுப்பு: தினேஷ் பொன்னுராஜ்
நடன இயக்கம்: அசார்