Monday, March 16, 2026
spot_img
HomeCinemaநான் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன்; அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்கு பயம்! -பேட்ட...

நான் 11-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவன்; அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்கு பயம்! -பேட்ட ராப் பட விழாவில் ‘நடனப் புயல்’ பிரபுதேவா பேச்சு

Published on

‘நடனப் புயல்’ பிரபுதேவா கதை நாயகனாக நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரமாண்டமாக நடந்தது.

நிகழ்வில் பிரபுதேவா பேசியபோது, ” இந்த படத்தில் பணியாற்றும் போது படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள், படப்பிடிப்பு தளம்.. என அனைத்தும் மனதிற்கு மகிழ்ச்சியான அனுபவத்தை அளித்தது. படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியாகவும், உற்சாகவும் இருந்தது. ரமேஷ் திலக், விவேக் பிரசன்னா, பக்ஸ், வையாபுரி, ஜே பி ஆகியோருடன் இணைந்து பணியாற்றியதும் சந்தோஷமாக இருந்தது.

இமான் ஏற்கனவே தனது திறமையை நிரூபித்திருக்கிறார். ஆனால் எனக்கு அவர் ஒரு ஜென்டில்மேன் ஆகத்தான் பார்க்கிறேன். அவருடைய பெருந்தன்மை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் எப்போதும் பாசிட்டிவ்வானவர். இந்தப் படத்திற்கும் அவர் நல்ல பாடல்களையும், இசையும் வழங்கி இருக்கிறார்.

நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்.

சண்டை பயிற்சி இயக்குநர் தினேஷ் காசி சண்டைக் காட்சிகளை படமாக்குவதற்காக நேர்த்தியாகவும் , திறமையாகவும் திட்டமிடுகிறார். பயங்கர புத்திசாலி. அவருக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தால் உச்சம் தொடுவார்.‌

இந்தப் படத்தில் இயக்குநரும், கதாசிரியர் தினிலும் இணைந்து உருவாக்கிய திரைக்கதை எனக்கு பிடித்திருந்தது. நான் லீனியர் பாணியில் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது ரசிகர்களை நிச்சயம் கவரும்.

தயாரிப்பாளரும், இயக்குநரும் மிகச் சிறந்த நண்பர்கள். அவர்களுடன் தொடர்ந்து பணியாற்றவும், பயணிக்கவும் விரும்புகிறேன்.

நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்.

செப்டம்பர் 27ஆம் தேதியன்று ‘பேட்ட ராப்’ வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாலிவுட் நடிகர் சல்மான்கான் ‘சிவகாசி’, ‘திருப்பாச்சி’ ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் ‘பேட்ட ராப் ‘ படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

இயக்குநர் எஸ் ஜே சினு பேசியபோது ”இந்த தருணம் கனவு நனவான தருணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னைக்கு வருகை தந்து பிரபுதேவா மாஸ்டரை சந்தித்து கதையை சொன்னேன். அந்த நிமிடத்தில் இருந்து இந்த நிமிடம் வரை இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்வு நடைபெறும் தருணம் வரை… பிரபுதேவாவின் ஒத்துழைப்பு வியக்க வைக்கிறது. அத்துடன் இந்த படத்திற்கான வளர்ச்சியில் இறைவனின் ஆசியும் இருப்பதை உணர்கிறேன்.‌ இதனால் கடவுளுக்கும், தயாரிப்பாளருக்கும் , இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் உருவானதற்கு முதல் காரணம் என்னுடைய நண்பரும் தயாரிப்பாளருமான ஜோபி பி சாம். இவருடைய ஆதரவு இல்லை என்றால் இந்த நிகழ்வு இல்லை. இந்தப் படத்திற்காக நான் சொன்ன அனைத்து செலவுகளையும் மறுக்காமல் முக மலர்ச்சியுடன் செய்தார். படப்பிடிப்பு தருணங்கள் தொடங்கி தற்போது இந்த நிகழ்வு வரை படத்திற்கு முக்கியத் தூணாக இருப்பவர் தயாரிப்பாளர். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இதனைத் தொடர்ந்து பிரபு தேவா மாஸ்டர். ஒரு புது இயக்குநராக இருந்தாலும்.. எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். அவரை சந்தித்து கதையை சொன்ன போது, ‘முழு திரை கதையுடன் வாருங்கள். இணைந்து பணியாற்றலாம்’ என்றார். அதன் பிறகு கதாசிரியர் டினிலுடன் இணைந்து அவரிடம் முழு கதையையும் விவரித்தோம். அவரை சந்தித்த தருணத்திலிருந்து அவரிடம் உள்ள நேர்நிலையான அதிர்வலை எங்களை உற்சாகமடையச் செய்தது. இந்த படத்திற்காக அவர் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க இயலாது. படப்பிடிப்பு நடைபெற்ற 65 நாட்களிலும் அவர் படப்பிடிப்பு தளம் முழுவதையும் மகிழ்ச்சியாகவே வைத்திருந்தார். இதற்காக இந்த தருணத்தில் அவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த படத்திற்கு நாங்கள் ‘பாட்டு அடி ஆட்டம் ரிப்பீட்டு’ என டாக் லைனை இணைத்திருக்கிறோம்.‌ இதனை இசையமைப்பாளர் இமானை சந்தித்தபோது சொன்னேன். அவரும் இதனை உணர்ந்து படத்திற்காக பத்து பாடல்களை இசையமைத்து வழங்கி இருக்கிறார். இந்த படத்தின் முக்கிய அம்சமே இன்னிசைதான். அதனை அதிரடியாக வழங்கி உற்சாகப்படுத்திய இசையமைப்பாளர் டி இமானுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை வேதிகா.‌ சிறந்த நடிகை மட்டுமல்ல அற்புதமான நாட்டிய கலைஞரும் கூட. அதனைத் தொடர்ந்து இந்த படத்தில் நடித்திருக்கும் நடிகை சன்னி லியோன் எங்களுக்கு எதிர்பாராமல் கிடைத்த பரிசு. அவர் எப்போதும் பரபரப்பாகவே இருந்தார். இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்தோம். அதன் பிறகு அவரை தொடர்பு கொண்டு மாஸ்டர் பிரபுதேவா உடன் இணைந்து ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்று சொன்னோம். அவர் பிரபுதேவா என்று சொன்னவுடன் வேறு எதை பற்றியும் யோசிக்காமல் நடிக்க ஒப்புக்கொண்டார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் இந்த படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பாடலாசிரியர்கள், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர், நடன இயக்குநர், சண்டை பயிற்சி இயக்குநர், தயாரிப்பு நிர்வாகி ஆனந்த் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் திரையுலகில் நேர்மையாகவும், மரியாதையுடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் இருக்கிறார்கள் என்பதை இந்த படத்தின் பணிகள் நடைபெற்ற போது தெரிந்து கொண்டேன். இதன் காரணமாகவே ப்ளூ ஹில் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தொடர்ந்து தமிழில் படங்களை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறது. இந்தப் படத்தை தொடர்ந்து விரைவில் அடுத்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும்.

27 ஆம் தேதி இன்று திரையரங்கில் வெளியாகும் இந்த திரைப்படத்தை அனைவரும் குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த திரைப்படம் ஃபேமிலி வித் மியூசிகல் என்டர்டெய்னர். பத்து வயது முதல் அறுபது வயது வரை உள்ள அனைவரும் ரசிக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. ” என்றார்.

நிகழ்வில் நடிகை சன்னி லியோன், நடிகை வேதிகா, தயாரிப்பாளர் ஜோபி பி சாம், இசையமைப்பாளர் டி. இமான், பாடலாசிரியர் விவேகா, இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்.

Latest articles

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் தமிழ்க்குமரன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்பில் உற்சாகமாக நடந்த ரூம் பாய் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா! 

ஏசிஎம் சினிமாஸ் சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரிக்க, திரைப்பட கல்லூரி மாணவரான ஜெகன் ராயன் எழுதி இயக்கியுள்ள 'ரூம் பாய்'...

More like this

ஜனநாயகன் படத்தின் ஆடியோ வெளியிட்டு நிகழ்வை மலேசியாவில் பிரமாண்டமாக நடத்திய டத்தோ அப்துல் மாலிக்கின் மனித நேயத்தை பாராட்டி தேசம் ஐக்கான் விருது வழங்கி கெளரவிப்பு!

மலேஷியாவின் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைப்பட வினியோகஸ்தரும்,தொழில் அதிபருமான டத்தோ அப்துல் மாலிக் புகழ் பெற்று விளங்கி வருகிறார். தமிழ்...

செல்வராகவன் நடித்துள்ள மனிதன் தெய்வமாகலாம் ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ்!

செல்வராகவன் நடித்துள்ள புதிய திரைப்படமான மனிதன் தெய்வமாகலாம் உலகம் முழுவதும் வரும் ஏப்ரல் 10 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில்,...

மேட் இன் கொரியா சினிமா விமர்சனம்

எளிமையான குடும்பத்துப் பெண் செண்பகத்துக்கு சிறுவயதிலிருந்தே கொரியாவுக்கு போகவேண்டும் என்பது ஆசை. அந்த ஆசை, அவர் ஒருவரை காதலிக்கும்...
error: Content is protected !!