வீரா, சமிதா, அம்ருதா வி. ராஜ், போஸ், கதிர்வேல், குருமூர்த்தி, ரோகித் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘பிரபஞ்சம்.’
‘பிரைட் ஸ்டார் மூவீஸ்’ எஸ்.ஏ. கரீம் தயாரித்துள்ள இந்த படத்தை, பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் பணிபுரிந்த சங்கர் ஜி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். சென்னையிலும் சென்னையைச் சுற்றியுள்ள அழகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இந்த உலகத்தில் ஒவ்வொருவரும் தங்களது வாழ்க்கையில் இன்ப துன்பங்களைச் சந்தித்து வருகிறார்கள். இந்த
உலகம் எல்லோருக்குமானது என்று நினைக்கிறோம். ஆனால் வாழத் தெரிந்தவர்களுக்கே இந்த உலகம் வசப்படுகிறது என்பதை பரபரப்பான கதையாக்கி, விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறேன்” என்றார்.
படக்குழு:-
ஒளிப்பதிவு: உதய்சங்கர்
இசை: பிரேம்
சண்டை பயிற்சி: இடிமின்னல் இளங்கோ
படத்தொகுப்பு: ரகு
தயாரிப்பு நிர்வாகம்: மனோகர்