கன்னடம், தெலுங்கு உட்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ள பகத் விக்ராந்த் தமிழில் நாயகனாக அறிமுகமாக, கதாநாயகியாக சித்து நடித்துள்ள படம் ‘P 2 இருவர்.’
முற்றிலும் மாறுபட்ட கோணத்தில், நம்பிக்கை துரோகத்தை மையமாக வைத்து ஹாரர் மற்றும் திரில்லர் கலந்து கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் சிவம்.
தேனிசைத் தென்றல் தேவா இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வெளியாகிறது.
படக்குழு:-
தயாரிப்பு – பி. ராமலிங்கம்
ஒளிப்பதிவு – எஸ் ஆர் வெற்றி
பாடல்கள் – சினேகன்
எடிட்டிங் – மாதவன்
ஸ்டண்ட் – ஓம் பிரகாஷ்
நடனம் – ராதிகா, ஜான்
மக்கள் தொடர்பு – மணவை புவன்