Wednesday, January 14, 2026
spot_img
HomeCinemaபிதா படம் பார்த்து படக்குழுவினரை பாராட்டிய திரைப் பிரபலங்கள்... போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து!

பிதா படம் பார்த்து படக்குழுவினரை பாராட்டிய திரைப் பிரபலங்கள்… போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து!

Published on

இந்திய சினிமா வரலாற்றில் 23 மணி நேரம், 23 நிமிடங்களில் எடுக்கப்பட்டு வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிற ‘பிதா’ படத்தின் சிறப்புத் திரையிடலில் திரையுலகப் பிரபலங்கள் பார்த்து ரசித்தனர். பார்த்த அனைவருமே படத்தையும், படக் குழுவினரையும் வெகுவாக பாராட்டினார்கள்.

அதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பும் நடந்தது. தயாரிப்பாளர்கள் ஜி.சிவராஜ், அன்புச் செழியன், ஆக்ஷன் ரியாக்ஷன் ஜெனீஷ், இயக்குனர்கள் அரவிந்தராஜ், பேரரசு, கேபிள் சங்கர், எஸ்.சுகன், நடிகர்கள் மாஸ்டர் மகேந்திரன், ஆதேஷ் பாலா, சாம்ஸ், சம்பத்ராம், ஸ்ரீராம் சந்திரசேகர், மாரிஸ் ராஜா, மாஸ்டர் தர்ஷித், நடிகை ரிஹானா ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் ‘பிதா’ படத்தின் போஸ்டரை இயக்குநர்கள் அரவிந்தராஜ், பேரரசு, நடிகர் மாஸ்டர் மகேந்திரன் ஆகியோர் வெளியிட்டனர்.

காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் காப்பாற்றுவது தான் கதை.

ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரிஹானா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர். எஸ்.சுகன் விறுவிறுப்பாக இயக்கியுள்ளார்.

எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரித்துள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனிஷ் இந்த படத்தை வரும் ஜூலை 26-ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்.

படக்குழு:-
வசனம்: பாபா கென்னடி
ஒளிப்பதிவு: இளையராஜா
இசை: நரேஷ்
எடிட்டர்: ஸ்ரீவர்சன்
கலை: கே.பி.நந்து
மக்கள் தொடர்பு: கோவிந்தராஜ்

Latest articles

திகிலான பொழுதுபோக்குடன் 2026-ம் ஆண்டை துவங்கிய ZEE5… ஜீவா, ஆண்ட்ரியா பங்களிப்ப்பில் பொங்கல் கொண்டாட்டம் ஆரம்பம்!

ZEE5 தமிழ், 2026-ம் ஆண்டை மிகச் சிறப்பான முறையில் தொடங்கியுள்ளது. அதிரடியான திகில் நிறைந்த திரில்லர்கள் மற்றும் அதிரடி...

பயர் கார்த்திக் இயக்கத்தில் சஸ்பென்ஸ் கிரைம் திரில்லராக உருவான ‘M G 24’ பிப்ரவரி 20-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

அறிமுக இயக்குநர் பயர் கார்த்திக் இயக்கியுள்ள 'M G 24' படத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் பிரபலமான பிரணவ்...

பைசன் திரைப்படத்திற்கு Letterboxd தளம் மூலம் சர்வதேச அங்கீகாரம்!

சர்வதேச திரைப்பட விமர்சன தளம் Letterboxd வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசைப் பட்டியலில் பைசன் திரைப்படம் டாப் 10 ஆக்சன்...

More like this

error: Content is protected !!