Friday, April 25, 2025
spot_img
HomeCinemaநிறையப் பேர் இந்த படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது என்றார்கள்! -P.T.சார் படத்தின் வெற்றிக்...

நிறையப் பேர் இந்த படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது என்றார்கள்! -P.T.சார் படத்தின் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேச்சு

Published on

ஹிப் ஹாப் தமிழா ஆதி கதையின் நாயகனாக நடிக்க, கார்த்திக் வேணுகோபாலன் இயக்கிய, கமர்ஷியல் ஃபேமிலி எண்டர்டெயினர் திரைப்படம் ‘P T சார்.’ கடந்த மே 24-ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்கள், விமர்சகர்கள் பாராட்டை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,  வெற்றியை கொண்டாடும் வகையில், படக்குழுவினர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.

நிகழ்வில் ஹிப்ஹாப் தமிழா ஆதி பேசியபோது, இன்று வரை படம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது அதற்குக் காரணம் நீங்கள் தான். உங்கள் பாராட்டுக்கு நன்றி. உங்கள் அறிவுரையின் படி நல்ல படங்களைத் தொடர்ந்து செய்வேன். ஒரு கல்வியாளராக இருந்துகொண்டு இந்தப்படத்தைத் தயாரித்ததற்காக ஐசரி சாருக்கு நன்றி. பெண்கள் வேலை பார்க்கும் மில்லில் இரண்டு ஸ்பெஷல் ஷோ போட்டார்கள் என்று சொன்ன போது, படம் வசூலித்தது என்பதை விட அதிகம் சந்தோசப்பட்டார் அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. தொடர்ந்து உங்களுடன் படம் செய்ய ஆவலுடன் இருக்கிறேன்

இந்தப் படத்தை நம்பி வந்த ஆர்டிஸ்ட் அனைவருக்கும் நன்றி. கோர்ட் ரூம் சின்ன போர்ஷன் அதை நம்பி வந்து, எங்களுக்காக நடித்து தந்த பாக்யராஜ் சாருக்கு நன்றி. இளவரசு அண்ணன் ஒரு பாத்திரமாக வாழ ஆரம்பித்து விடுகிறார். ஷூட்டிங்கில் அவ்வளவு அர்ப்பணிப்புடன் நடிப்பதைப் பார்த்து அவரிடம் நிறையக் கற்றுக்கொண்டேன். பிரபு சார்,  பட்டிமன்றம் ராஜா சார், தேவதர்ஷினி மேடம், என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இருந்தார்கள். பெரும் ஒத்துழைப்பு தந்தார்கள். இதையெல்லாம் ஒழுங்கு படுத்தி, நல்ல டைரக்டர், சிக்கனமான டைரக்டர் என்று பெயரெடுத்த கார்த்திக்கிற்குப் பாராட்டுக்கள். இந்தப்படத்தில் என்னை நாயகனாக்கியதற்கு நன்றி கார்த்திக். இந்தப்படத்தில் அனைத்து கலைஞர்களும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்தார்கள். முனீஷ் அண்ணாவுடன் திரும்ப நடித்தது மகிழ்ச்சி. இந்தப்படத்தின் வெற்றியை விட எனக்கு மனதளவில் மிகப்பெரிய திருப்தியை இந்தப்படம் தந்துள்ளது” என்றார்.

இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன் பேசியபோது, ”இந்த கதை யோசித்த போது ஹராஸ்மெண்ட் பற்றி எல்லோரும் சொல்லிவிட்டார்கள். ஆனால், அதன் பிறகு பெண்கள் படும் கஷ்டத்தைச் சொல்லலாம் என நினைத்தேன். நிறையப் பேர் படம் பார்த்துவிட்டு எங்களுக்கும் இது நடந்துள்ளது; இப்படம் நல்ல தெளிவைத் தந்துள்ளது என்று சொல்கிறார்கள். மிகப்பெரிய மகிழ்ச்சி. படத்தை வெற்றி பெறச்செய்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

வேல்ஸ் பிலிம்ஸ் டாக்டர் ஐசரி கே கணேஷ், ”’P T சார்’ படத்தின் மூன்றாவது நிகழ்ச்சி இது. படம் வெளியாகி மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைய காலத்தில் சினிமாக்கள் இரண்டு நாள் ஓடுவது கடினமாக இருக்கிறது. அதற்கு நிறையக் காரணங்கள் இருக்கிறது. ஓடிடி தளங்கள் வந்த பிறகு சினிமா மாறிவிட்டது. அதையெல்லாம் தாண்டி ‘P T சார்’  நன்றாகப் போகிறது. அதிலும் பலர் ஒரு நல்ல சினிமாவை எடுத்திருக்கிறார்கள் என்று பாராட்டினார்கள் அது பெரிய மகிழ்ச்சி. வெற்றிப்படம் என்றாலும் திருப்தி இருக்க வேண்டும் அதற்குக் காரணமாக இருந்த இயக்குநர் கார்த்திக் அவர்களுக்கு நன்றி. அவர் சிறந்த இயக்குநராக வருவார். அவரது அடுத்த படத்தையும் நானே தயாரிக்கிறேன். புது இயக்குநர்கள் சிக்கனமாகப் படமெடுங்கள், நல்ல படமெடுங்கள். ஹிப்ஹாப் ஆதி தான் இந்தப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். அவர் இசையும் இதில் நன்றாக இருந்தது. பாக்யராஜ் சார் க்ளைமாக்ஸில் கலக்கிவிட்டார். படத்தில் உழைத்த அனைவருக்கும், படத்தைப் பாராட்டிய உங்களுக்கும் நன்றிகள்” என்றார்.

நிகழ்வில் இயக்குநர் பாக்யராஜ், நடிகர் இளவரசு, முனீஷ்காந்த், ஆர்ட் டைரக்டர் அமரன், ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கம் உள்ளிட்டோரும் பேசினார்கள்.

 

Latest articles

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம். போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள்...

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

More like this

மனைவிக்கு திருமணநாள் பரிசாக பி எம் டபிள்யூ கார் பரிசளித்த இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர்!

இயக்குநர் எஸ் .ஏ .சந்திரசேகர் தனது காதல் மனைவி ஷோபா சந்திரசேகருக்கு ஒரு பிஎம் டபிள்யூ கார் திருமண...

சசிகுமார் – சிம்ரன் நடிக்கும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

நடிகர் சசிகுமார் - சிம்ரன் ஆகிய இரண்டு பிரபல நட்சத்திரங்களும் முதன்மையான வேடங்களில் நடித்திருக்கும் ' டூரிஸ்ட் ஃபேமிலி...

வல்லமை சினிமா விமர்சனம்

சமூக அக்கறை படைப்புகளின் வரிசையில் இணைகிற படம். போஸ்டர் ஒட்டுவதை தொழிலாக கொண்ட சரவணனின் (பிரேம்ஜி) பூப்பெய்தும் பருவத்திலிருக்கிற மகள்...
error: Content is protected !!