விமல், கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே ராஜா இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், மனதை உருக வைக்கும் அழகான படைப்பாக உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம் வெகு தூரமில்லை.’
இதுவரையிலான திரைப்பயணத்தில் தான் ஏற்றிராத வித்தியாசமான பாத்திரத்தில் நாயகனாக விமல் நடித்துள்ளார். கருணாஸ் மிக முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.
நடிகர் விமல் மற்றும் கருணாஸ் கதாபாத்திரங்களின் பின்னணியில் ஒரு காரும் இடம்பெற்றிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் பார்த்தவுடனே உணர்வுப் பூர்வமான கதைக்களத்தில் அற்புதமான அனுபவம் தரும் திரைப்படமாக இருக்குமென்பதை உறுதி செய்வதாக இருந்தது. மிக வித்தியாசமானதாக அமைந்துள்ள ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவின் வழக்கமான கமர்சியல் அம்சங்களில் இருந்து மாறுபட்டு ஒரு வித்தியாசமான களத்தில், மனதில் புன்னகை வர வைக்கும், வாழ்க்கை அனுபவங்களுடன், அழகான படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.
இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும், மார்ச்சுவரி வேன் ஓட்டும் நாயகன் விமல், தனது அவசரப் பணத்தேவைக்காக, திருநெல்வேலி வரை ஒரு முக்கியமானவரின் உடலை எடுத்துச் செல்கிறார். சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் செல்லும் பயணம் தான் இந்த படத்தின் மையம். அந்தப் பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர்கள், அவருக்கு ஏற்படும் அனுபவங்கள் மற்றும் தடங்கல்களை தாண்டி அவர் எப்படிச் சென்றடைகிறார் என்பது தான் இப்படத்தின் கதை.
சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது.
படப்படிப்பும் முடிந்த நிலையில், விரைவில் டீசர், டிரெய்லர், பாடல்கள் வெளியாகவிருக்கிறது.
படக் குழு:
இயக்குநர்: மைக்கேல் K ராஜா
தயாரிப்பாளர்: சிவா கிலாரி (Shark 9 pictures)
இசையமைப்பாளர்: N.R.ரகுநந்தன்
ஒளிப்பதிவாளர்: டெமில் சேவியர் எட்வர்ட்ஸ்
தொகுப்பாளர்: M.தியாகராஜன்
கலை இயக்குநர்: சுரேந்தர்
ஸ்டண்ட் டைரக்டர்: மெட்ரோ மகேஷ்
நடன மாஸ்டர்: ரிச்சி ரிச்சர்ட்சன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : ராகேஷ் ராகவன்
நிர்வாக தயாரிப்பாளர்: வெங்கி மகி
மக்கள் தொடர்பு – AIM சதீஷ்