Tuesday, January 20, 2026
spot_img
HomeCinemaசூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில், விவசாயிகளின் வாழ்வியலை அலசும் ‘பரமன்.’

சூப்பர் குட் சுப்பிரமணி நடிப்பில், விவசாயிகளின் வாழ்வியலை அலசும் ‘பரமன்.’

Published on

‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘பரமன்.’

பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

மறைந்த நடிகை விஜே சித்ரா நடித்து வெளியான ‘கால்ஸ்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சபரிஸ் இரண்டாவது படமாக இந்த படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை பதிவு செய்திருந்த சபரிஸ், இந்த படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையிலெடுத்துள்ளார். தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் வெளியிட்டுள்ளனர். அவர்கள் படத்தின் டிரெய்லரை பார்த்துவிட்டு, ‘இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது என்று குறிப்பிட்டு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். விரைவில் இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

சபரிஸ் இயக்கிய முதல் படமான ‘கால்ஸ்’  கடந்த கோவிட் காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது. அதே சமயம் இப்போது வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்த படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. அமேசான் பிரைமில் இதுவரை பல கோடி பேருக்கு மேல் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

படக்குழு:
தயாரிப்பு: ‘இன்ஃபினிட் பிக்சர்ஸ்’ ஜெ.சபரிஸ்
இயக்கம், படத்தொகுப்பு: ஜெ. சபரிஸ்
கதை: இதயநிலவன்
இசை: தமீம் அன்சாரி
பாடகர்கள்: வேல்முருகன், முகேஷ்
ஒளிப்பதிவு: சிபி சதாசிவம்
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

Latest articles

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...

கவின் – பிரியங்கா மோகன் முதன்முறையாக இணையும் படத்தில் சாண்டி மாஸ்டர்!

கவின் – பிரியங்கா மோகன் ஜோடி கென் ராய்சன் இயக்கத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்தில் சாண்டி மாஸ்டர் முக்கிய...

More like this

“விஸ்வராகம்” என்பது தென்னிந்திய இசை வரலாற்றில் காலத்தால் அழியாத மெல்லிசைகளால் பல தலைமுறைகளை ஆட்கொண்ட M. S. Viswanathan...

சாந்தனு பாக்யராஜின் ‘மெஜந்தா’ திரைப்பட டீசர் வெளியானது!

நடிகர் சாந்தனு பாக்யராஜ் தனது நடிப்பு திறனுக்கு தீனி போடும் வகையிலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர். ஒவ்வொரு...

‘மரகத நாணயம் 2’ படத்தின் விஷுவல் கிளிம்ப்ஸ் வெளியானது!

வெற்றியடைந்தது மட்டுமல்லாது தமிழ் சினிமாவின் பொழுதுபோக்கு தரத்தை மறுவரையறை செய்தது கடந்த 2017-ம் ஆண்டு வெளியான கற்பனை நகைச்சுவை...
error: Content is protected !!