Monday, February 10, 2025
spot_img
HomeCinemaதிரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிக்கும் 'பவுடர்' ரீ ரிலீஸுக்கு தயார்!

திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிக்கும் ‘பவுடர்’ ரீ ரிலீஸுக்கு தயார்!

Published on

திரைப்பட மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் நடிப்பில் உருவான ‘பவுடர்’ படம் திரையரங்குகளில் வெளியாகி பல்வேறு தரப்புகளிடமிருந்து பாராட்டுகளை பெற்றது.

தற்போது இந்த படம் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகி இணையவாசிகள் மற்றும் இன்றைய தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து, இத்திரைப்படத்தை திரையரங்குகளில் மீண்டும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

நடிகர் சாருஹாசனை வைத்து ‘தாதா 87’ திரைப்படத்தை இயக்கியவரும், வெள்ளிவிழா நாயகன் மோகன் நடிப்பில் ‘ஹரா’ மற்றும் அமலா பால் சகோதரர் அபிஜித் பால் நடிக்கும் திரைப்படம் உள்ளிட்டவற்றை இயக்கி வருபவருமான விஜய் ஸ்ரீ இந்த படத்தை இயக்கியிருந்தார். படத்தை ஜி மீடியா பேனரில் ஜெயஸ்ரீ விஜய் தயாரித்துள்ளார்.

சாந்தினி தேவா, ‘மொட்டை’ ராஜேந்திரன், சிங்கம்புலி, வையாபுரி, ஆதவன், ‘சில்மிஷம்’ சிவா, விக்கி ஆகியோர் நடித்துள்ள இந்த படத்தில் மனைவியிடம் திட்டு வாங்கும் கணவனாக இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி நடித்துள்ள காட்சிகள், குறிப்பாக பணம் கிடைத்தவுடன் அதிகாலையில் மனைவியை ஷாப்பிங்கிற்கு அழைக்கும் காட்சி, ரசிகர்களிடம் பாராட்டு பெற்றுள்ளது. வையாபுரி மற்றும் அனித்ரா நாயர் தந்தை-மகளாக தோன்றும் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களின் இதயங்களை தொட்டுள்ளன. ‘பவுடர்’ திரைப்படத்திற்கு பிறகு லியோ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடிக்க வையாபுரிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

படத்தில் காவல் துறை அதிகாரியாக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் நிகில் முருகன். சினிமா நிகழ்ச்சிகளில் பல வண்ண உடைகளில் அவரை பார்த்தவர்கள் காக்கி சீருடையில் ‘பவுடர்’ படத்தில் கலக்குவதை வெகுவாக ரசித்து வருகின்றனர்.

‘பவுடர்’ படக்குழு:
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – விஜய் ஸ்ரீ ஜி
இசை – லியாண்டர் லீ மார்ட்
ஒளிப்பதிவு – ராஜபாண்டி
படத்தொகுப்பு – குணா
கலை இயக்குநர் – சரவணா
சண்டைக்காட்சி – விஜய்
உடைகள் – வேலவன்
புகைப்படங்கள் – ராஜா
சவுண்ட் ஸ்டுடியோ – சவுண்ட் ஹோலிக் ஸ்டுடியோ
ஒலி வடிவமைப்பு – பிரேம்குமார்
ஒலிக்கலவை – நவீன் ஷங்கர்
டிஐ வண்ணம்: வீரராகவன்
வடிவமைப்பு – ஜி டிசைன்ஸ்
தயாரிப்பு மேலாளர் – சரவணன்
தயாரிப்பு நிறுவனம் – ஜி மீடியா
தயாரிப்பாளர் – ஜெய ஸ்ரீ விஜய், கோவை எஸ் பி மோகன் ராஜ்
ஆடியோ லேபிள் – டிவோ
மக்கள் தொடர்பு – நிகில் முருகன்

Latest articles

திரைத்துறை ஊழியர்களை ஊக்கப்படுத்த ‘பி.டி.ஜி யூனிவர்சல்’ நிறுவனம் முன்னெடுத்த விழா; இயக்குநர்கள் ஆர் கே செல்வமணி, ஆர் வி உதயகுமார் பங்கேற்பு! 

'டிமாண்டி காலனி 2', 'சென்னை சிட்டி கேங்கஸ்டர்ஸ்', 'ரெட்ட தல' ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல திரைப்பட தயாரிப்பு...

இயக்குநர் ராம் கோபால் வர்மா, நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸை வெளியிட்டார்!

பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ...

‘9 AM to 9 PM வாலன்டைஸ் டே’ படத்தின் பாடல்கள் வெளியீட்டு நிகழ்வில், படத்திற்கு இலவச டிக்கெட் வழங்கப்போகும் இயக்குநரை பாராட்டிய கே ராஜன்!

'9 AM to 9 PM வாலன்டைன்ஸ் டே' படத்தின் பாடல்களை வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.ராஜன் வெளியிட்டு...

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்தின் தொடக்கவிழா பூஜையுடன் நடந்தது!

அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது....

More like this