தமிழ் சினிமாவில் ஷோபா முதல் த்ரிஷா வரை திறமையால் சாதித்தவர்கள் அதிகம். அந்த வரிசையில் இடம்பெறுவதற்கான அனைத்து தகுதிகளோடு பல்வேறு ஊடக தளங்களில் வெவ்வேறு பாத்திரங்களில் வெளிப்பட்டு திறமையை நிரூபித்து வருகிறார் பூர்ணிமா ரவி. அதே ஆர்வத்தோடு தனது திறமையை இன்னும் செழுமைப்படுத்தும் கதாபாத்திரங்களில் நடிக்க சினிமாவிலும் தனது பயணத்தைத் தொடங்கியிருக்கிறார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ‘செவப்பி’ மற்றும் பல படங்களில் தனது சிறந்த நடிப்பால் கவனம் ஈர்த்தார். சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலத்தில் அவர் தான் விரும்பிய கதாபாத்திரங்களைக் கண்டுபிடிப்பதில் சவால்களை எதிர்கொண்டார். இப்போது, அவரை முதன்மைப்படுத்தி நிறைய பட வாய்ப்புகள் வருகிறது.
தனக்குப் பிடித்த நடிகர் என தனுஷைக் குறிப்பிடுபவர், எந்த கதாபாத்திரத்திலும் தன்னை மாற்றிக் கொண்டு அதற்காக எந்த எல்லைக்கும் தனுஷ் செல்வது குறித்து தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார். பக்கத்து வீட்டுப் பையன் என்ற கதாபாத்திரமாக இருந்தாலும் கூட, திரையரங்குகளில் அவருக்காக பார்வையாளர்கள் வருவார்கள் என்றார். இதேபோன்ற நடிப்புத் திறமை த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷூக்கும் இருப்பதாக சொல்கிறார். ’ஹீரோயின் மெட்டீரியல்’ என்று சினிமாவில் எதுவும் இல்லை என்பவர், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு பெறும்போது அதற்கு 100 சதவீத உழைப்பைக் கொடுக்க வேண்டும் என்கிறார்.