உழைப்பால் உயர்ந்தவர்களுக்கு இந்த உலகில் என்றும் தனி மரியாதை உண்டு. கடும் உழைப்பை வித்திட்டவர்கள் நிச்சயம் என்றாவது ஒரு நாள் ஒரு உயர்ந்த நிலையை எட்டுவது உறுதி. அந்த வகையில் சாதனை மனிதர்களைக் கண்டறிந்து அவர்களது வெற்றிப் பயணம் எவ்வாறு அமைந்தது என்பதை சுவாரசியமாக அவர்களுடைய இடத்திற்கே சென்று பதிவு செய்வதே ‘சக்சஸ் ஸ்டோரீஸ்’ எனும் இந்த நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சி ஜனவரி 7; 2024 முதல் ஞாயிறு தோறும் காலை 10:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. பிருந்தா தொகுத்து வழங்குகிறார்.