அசோக் செல்வன் கதைநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கும் படத்திற்கு #AS23 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்குகிறார்.
கதையை ‘போர் தொழில்’ எனும் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்ற திரைப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் ராஜா எழுதியிருக்கிறார்.
முழு நீள பொழுதுபோக்கு படைப்பாக உருவாகும் இந்த படத்தை ஹாப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் இணைந்து தயாரிக்கிறார்கள்.
இந்த படத்தின் தொடக்க விழா பூஜையுடன் நடந்தது.
‘ஓ மை கடவுளே’ எனும் பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படத்தை வழங்கிய நிறுவனத்தின் இரண்டாவது படைப்பு இது என்பதாலும், ‘போர் தொழில்’ பட புகழ் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதை எழுதி இருப்பதாலும் இந்த படத்தின் அறிவிப்பு வெளியான நிலையிலேயே ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
படத்தின் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் குழு பற்றிய விவரங்கள் விரைவில் தெரியவரும்.