Monday, March 24, 2025
spot_img
HomeCinemaஇதுவரை கிடைக்காத புதிய திரையனுபவத்தை தரப்போகும் 'ஒரு நொடி.' 

இதுவரை கிடைக்காத புதிய திரையனுபவத்தை தரப்போகும் ‘ஒரு நொடி.’ 

Published on

தமன்குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கிய ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று இசை அசுரன் ஜீ வி பிரகாஷ் குமார் வெளியிட்டார்.

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் ‘தொட்டால் தொடரும்’ பட நாயகனும் ‘அயோத்தி’ படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்தவருமான தமன் குமார் முற்றிலும் புதிய பாத்திரம் ஒன்றில் கதைநாயகனாக நடிக்கிறார்.

எம் எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, பழ கருப்பையா, தீபா ஷங்கர், சிவரஞ்சனி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர்.

முதல் படத்திலேயே முத்திரை பதிக்க விரும்பும் இயக்குநர், ஆர்வமும் நேர்மையும் மிக்க புதிய தயாரிப்பாளர், வளர்ந்து வரும் இளம் நடிகர் பட்டாளம் என்று ஆர்வம் மிக்க இந்தக் கூட்டணி திகில் மற்றும் மர்மம் நிறைந்த சஸ்பென்ஸ் கதை ஒன்றை புதிய கோணத்தில் சொல்லக் காத்திருக்கிறது. ரசிகர்கள் யூகிக்க முடியாத மர்ம முடிச்சுகள் படத்தின் இன்னொரு பலம்.

படப்பிடிப்பு முழுமையடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் வெகு மும்முரமாக நடந்து வருகின்ற நிலையில், வெகுவிரைவில் திரையில் இப்படத்தை காணலாம்.

பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக் கல்லூரி நிறுவனரும், ‘காற்றின் மொழி’, ‘இவன் தந்திரன்’, ‘கோடியில் ஒருவன்’, ‘கொலைகாரன்’ போன்ற முக்கியமான படங்களை வெளியிட்ட விநியோகஸ்தருமான தனஞ்செயன் இப்படத்தை முன்னின்று வழங்குகிறார்.

படக்குழு:-
தயாரிப்பு: மதுரை அழகர் புரடக்ஷன் கம்பெனி மற்றும் வொயிட் லேம்ப் பிக்ஷர்ஸ்
இசை: அறிமுக இசையமைப்பாளர் சஞ்சய் மாணிக்கம்
ஒளிப்பதிவு: கே .ஜி ரத்தீஷ்
கலை இயக்குநர்: எஸ் ஜே ராம்
படத்தொகுப்பு: எஸ் குரு சூர்யா
மக்கள் தொடர்பு : ஸ்ரீவெங்கடேஷ்

Latest articles

ஆயிரக்கணக்கான மாணவர்கள் முன்னிலையில் அண்ணா யுனிவர்சிடி விழாவில், ‘யோலோ’ படத்தின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டது!

புதுமுகம் தேவ் நாயகனாக நடிக்க, MR Motion Pictures சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரிப்பில், இயக்குநர் எஸ் சாம்...

மளிகைக் கடை ஸ்பீக்கரில் அன்னக்கிளி பட பாடலை கேட்கப்போய் கடை ஓனரிடம் அடி வாங்கியிருக்கிறேன்; அந்தளவுக்கு இளையராஜாவின் வெறியன் நான்! -இசைஞானி இளையராஜாவை சந்தித்த உற்சாகத்தில் நடிகர் முத்துக்களை 

சிம்பொனி இசை அரங்கேற்றம் செய்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள இசைஞானி இளையராஜாவை நடிகர் முத்துக்காளை சந்தித்து வாழ்த்தி, ஆசி...

அரசியல் தலையீடுகளால் மாணவ சமூகம் எப்படியெல்லாம் பாழாகிறது என்பதை இந்த படம் எடுத்துக் காட்டியுள்ளது! -‘அறம் செய்’ படம் பார்த்து பாராட்டிய தொல் திருமாவளவன்

  அறம் செய் என்ற திரைப்படத்தின் சிறப்பு காட்சியில் கலந்துகொண்டு படத்தை பார்த்த தொல்.திருமாவளவன் தன் கருத்துகளை பகிர்ந்துகொண்டபோது... இயக்குநர் எஸ்...

More like this