Tuesday, April 22, 2025
spot_img
HomeMovie Reviewநேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம்

நேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம்

Published on

சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என்ற இரு வகைக்குள்ளும் பொருத்திக் கொள்கிற கதையம்சத்தில் ‘நேற்று இந்த நேரம்.’

விஸ்காம் முடித்த ஷாரிக் ஹாசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று பார்த்தால் ஷாரிக் காணாமல் போக, மிச்சமிருக்கும் ஆறு பேரையும் போலீஸ் விசாரிக்கிறது.

விசாரிக்க விசாரிக்க போலீஸுக்கு ஷாரிக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உருவாகிறது. அடுத்தநாளே அந்த குழுவிலிருந்து இன்னொரு இளைஞனும் காணாமல் போக,

காணாமல் போனவர்கள் என்னவானார்கள், காணாமல் போனதற்கு யார் காரணம், என்ன காரணம் என்பதை மையமாக வைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் சாய் ரோஷன் கே ஆர்.

பெண்களின் இளமையை வேட்டையாடுவதையும் போதைப் பொருட்கள் தரும் சுகத்தில் மிதப்பதையும் முழு நேரத் தொழிலாக வைத்திருக்கிறார் ஷாரிக். கதையின் நாயகன் என்றாலும் கொடுத்திருப்பதென்னவோ வில்லனுக்கான வேலைகள். அதை சரியாகச் செய்திருக்கிறார்.

மற்ற நடிகர், நடிகைகள் அத்தனைப் பேரும் கதாபாத்திரத்தின் தன்மையறிந்து கதையின் தேவையுணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

விஷாலின் ஒளிப்பதிவு, கெவினின் பின்னணி இசை நேர்த்தி.

நடந்த கொலைகளுக்கு இவர் காரணமாக இருப்பாரா, அவர் காரணமாக இருப்பாரா என்ற கோணத்தில் தொடரும் போலீஸ் விசாரணை ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பு தட்டுகிறது.

கதையின் இன்னொரு பக்கம் சீரியல் கில்லர் ஒருவனை போலீஸ் தேடிக் கொண்டிருக்க, அவன் கிளைமாக்ஸில் என்ட்ரி கொடுப்பதில் சுவாரஸ்யமிருக்கிறது. அதே சுவாரஸ்யம் எல்லா காட்சிகளிலும் இருந்திருந்தால் வசூலில் காட்டியிருக்கலாம் வீரம்.

Latest articles

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

More like this

மோகன்லால் நடித்து ஹிட்டடித்த ‘எம்புரான்’ வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல், ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீமாகவுள்ளது.

மோகன்லால் நடிப்பில் மலையாளத் திரையுலக வரலாற்றை மாற்றியமைத்த ப்ளாக்பஸ்டர் திரைப்படமான 'எம்புரான்' வரும் ஏப்ரல் 24-ம் தேதி முதல்,...

பொதுவாக குழந்தைகளை வைத்து காட்சிகளை படமாக்குவது கஷ்டம் என்பார்கள்; இந்த படத்தில் அப்படியில்லாமல் இயல்பாக நடித்துள்ளார்கள்! -நிழற்குடை பட இயக்குநர் சிவா ஆறுமுகம் 

தர்ஷன் பிலிம்ஸ் சார்பில் ஜோதி சிவா தயாரிப்பில் திரைப்படம் நிழற்குடை, சிவா ஆறுமுகம் கதை திரைக்கதை எழுதி இயக்குகிறார்,...
சஸ்பென்ஸ் திரில்லர், மர்டர் மிஸ்ட்ரி என்ற இரு வகைக்குள்ளும் பொருத்திக் கொள்கிற கதையம்சத்தில் 'நேற்று இந்த நேரம்.' விஸ்காம் முடித்த ஷாரிக் ஹாசன், திவாகர் குமார், நிதின் ஆதித்யா, அரவிந்த், ஹரிதா, மோனிகா ரமேஷ், காவ்யா அமீரா உள்ளிட்ட ஏழு பேர் கொண்ட குழு ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். சென்ற இடத்தில் ஜாலியாக இருக்கலாம் என்று பார்த்தால் ஷாரிக் காணாமல் போக, மிச்சமிருக்கும்...நேற்று இந்த நேரம் சினிமா விமர்சனம்
error: Content is protected !!