Sunday, April 20, 2025
spot_img
HomeCinemaவிராட் கர்ண், நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் பங்கேற்ற நடனம்; அபிஷேக் நாமா இயக்கும் 'நாக...

விராட் கர்ண், நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் பங்கேற்ற நடனம்; அபிஷேக் நாமா இயக்கும் ‘நாக பந்தம்’ படத்திற்காக உருவானது.

Published on

நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள்.

இளம் நாயகன் விராட் கர்ண் – பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக  இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் நானக்ராம்குடா ராமாநாயுடு ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாயகன் விராட் கர்ண்,  நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பாடலை படமாக்கி வருகின்றனர். இதற்காக ஏராளமான பொருட்செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அபே ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பின்னணி பாடகர்களான காலா பைரவா – அனுராக் குல்கர்னி மற்றும் மங்லி ஆகியோரின் துடிப்பான குரல்கள் இடம் பிடித்திருக்கிறது. பாடலாசிரியர் காசர்லா ஷ்யாம் அற்புதமான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கும். இதனால் படத்தில் இடம்பெறும் நடன காட்சிகள் ரசிகர்களை வசீகரிக்கும் என உறுதியளிக்கிறது.

‘தி சீக்ரெட் ட்ரெஷர் ‘ எனும் வாசகத்துடன் ‘நாக பந்தம்’ ஒரு சாகச காவிய படைப்பாக தயாராகி வருகிறது. அபிஷேக் நாமா கதை மற்றும் திரைக்கதை என இரண்டிலும் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி இந்த திரைப்படத்தை NIK ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் வழங்குகிறார்கள்.

இந்த திரைப்படத்தில் இளம் நாயகன் விராட் கர்ண் கதையின் நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜெகபதிபாபு, ரிஷப் சஹானி , ஜெயபிரகாஷ்,  ஜான் விஜய்,  முரளி சர்மா,  அனுசுயா, சரண்யா, ஈஸ்வர் ராவ், ஜான் கொக்கன், அங்கீத் கோய்யா , சோனியா சிங் , மேத்யூ வர்கீஸ், ஜேசன் ஷா, பி. எஸ். அவினாஷ் மற்றும் பேபி கியாரா ஆகியோர் நடிக்கிறார்கள்.

‘நாக பந்தம்’ திரைப்படம் – பண்டைய புராணங்களால் ஈர்க்கப்பட்ட ஒரு கதையை ஆன்மீகமும், சாகசமும் கலந்த கருப்பொருள்களுடன் இணைத்து, அனந்த பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜெகன்னாதர் ஆலயங்களில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மறைக்கப்பட்ட பொக்கிஷங்களில் இருந்து உத்வேகம் பெற்று உருவாகிறது.  ‘நாக பந்தம்’ இந்த புனித தலங்களை பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது. மேலும் இந்தியாவில் விஷ்ணு கோயில்களை  சுற்றியுள்ள மர்மங்களை சுவராசியத்துடன் முன் வைக்கிறது.

‘நாக பந்தம்’ 2025 ஆம் ஆண்டில் தமிழ் , தெலுங்கு,  இந்தி,  மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த திரைப்படத்தில் உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பு தரம்,  அதிநவீன வி எஃப் எக்ஸ் காட்சிகள் ஆகியவை இடம் பிடித்திருப்பதை உறுதி செய்கிறது. மேலும் இது ஒரு ஹை ஆக்டேன் ஆக்சன் படமாகவும் அமைந்திருக்கிறது. எஸ். சௌந்தர்ராஜன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அபே இசையமைக்கிறார். உரையாடல்களை கல்யாண் சக்கரவர்த்தி எழுத படத்தொகுப்பு பணிகளை ஆர். சி. பிரணவ் கவனிக்க  தயாரிப்பு வடிவமைப்பை அசோக் குமார் மேற்கொண்டிருக்கிறார். இப்படத்தின் திரைக்கதையை ஷ்ரா 1 மற்றும் ராஜீவ் என். கிருஷ்ணா ஆகியோர் மேம்படுத்தி இருக்கிறார்கள்.

 

Latest articles

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...

 தனுஷ், சேகர் கம்முலா கூட்டணியின் ‘குபேரா’ படத்திலிருந்து ‘போய்வா நண்பா’ பாடல் வெளியானது!

தனுஷ் நடித்துள்ள 'குபேரா'வின் முதல் பாடல் 'போய்வா நண்பா' வெளியாகி இணையத்தில் புயலாக சுழன்று கொண்டிருக்கிறது. அதிக ஆற்றல்...

More like this

டென் ஹவர்ஸ் சினிமா விமர்சனம்

இன்ட்ரஸ்டிங்கான இன்வெஸ்டிகேஷன் திரில்லர். சென்னையிலிருந்து வெளியூருக்கு போய்க் கொண்டிருக்கும் பேருந்தில் பயணிகள் நிரம்பியிருக்கும்போது ஒரு கொலை நடக்க, அதை செய்தது...

இது முதலாளித்துவத்திற்கு எதிரான படம்! -சொல்கிறார் ‘சென்ட்ரல்’ படத்தின் இயக்குநர் பாரதி சிவலிங்கம்

சென்னைக்கு எத்தனையோ அடையாளங்கள் இருந்தாலும் சென்ட்ரல் ரயில் நிலையம் ஒரு முக்கிய அடையாளமாக இன்று வரை இருந்து வருகிறது....

சூரி சாருக்காகவே எழுதப்பட்ட இந்த கதாபாத்திரம் எனக்கே நெகிழ்ச்சியாக இருந்தது! -மண்டாடி பட விழாவில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி பேச்சு

சூரி ஹீரோவாக நடிக்க, 'செல்ஃபி' என்ற தனது முதல் படத்தின் மூலம் பாராட்டுகளைக் குவித்த மதிமாறன் புகழேந்தி இயக்கும்...
error: Content is protected !!