ரிலீஸுக்கு தயாராகியிருக்கிறது ‘நானும் ஒரு அழகி.’ இந்த படத்தில், அருண் கதாநாயகனாக நடிக்க, மேக்னா கதாநாயகியாக நடித்துள்ளார். சிவசக்தி, சுபராமன், ராஜதுரை, ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
‘ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே’ என்று காலங்காலமாக சொல்லி வருவதுண்டு. இந்த படத்தில் ‘ஆக்குவதிலும் அழிப்பதிலும் ஆணுக்கு சம பங்கு உண்டு’ என ஒரு பெண் துணிச்சலான போராட்டத்தை மேற்கொள்வது கதைக் களமாகியிருக்கிறது.
இது ஒரு ஊரில், ஒரு குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டும் நடந்த கதை அல்ல. எல்லா ஊரிலும் ஏதாவது ஒரு குடும்பத்தில் பெண்களுக்கு இழுக்கு நடந்து கொண்டே இருக்கிறது. அதை முறியடித்து பெண் சமூகத்தை மாற்றியமைக்கும் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. படத்தை கே.சி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து இயக்கியுள்ளார் பொழிக்கரையான்.க
படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ‘கருவறை தெய்வமாக ஆசைப்பட்டேன் நானே…’ என்ற உறவுகளுக்கிடையான பாடலும், ‘விட்டுக் கொடுப்பதினால் நாங்கள் கெட்டுப் போவதில்லை…’ என்ற சமூக விழிப்புணர்வுப் பாடலும் பெரியளவில் கவனம் ஈர்க்கும் விதத்தில் உருவாகியுள்ளது.
30 நாட்களில் இரு கட்டமாக திருநெல்வேலி, களக்காடு, அம்பாசமுத்திரம், சேரன்மாதேவி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. அதையடுத்து பட வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில், படம் வரும் ஜூலை 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
படக்குழு:-
ஒளிப்பதிவு-மகிபாலன்
மக்கள் தொடர்பு – வெங்கட்