தினேஷ் மாஸ்டர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக நந்தனா ஆனந்த் நடிக்கும் படம் ‘நின்னு விளையாடு.’ படத்தை சி.சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.
‘ராஜ் பீகாக் மூவிஸ்’ எம் கார்த்திக் தயாரித்துள்ள இந்த படத்தில் தீபா சங்கர், பழ கருப்பையா, பசங்க சிவக்குமார், சாவித்திரி, சங்கவி ஜோதி, மதுரை குமரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
வரும் மே 3-ம் தேதி வெளியாகவிருக்கும் இந்த படம் மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட காளை மாடு வளர்க்கும் இளைஞனின் காதலும் வீரமும் கலந்த பாச போராட்டத்தை மையப்படுத்தி, குடும்பத்துடன் பார்க்கும்படியான படைப்பாக உருவாகியுள்ளது.
காளை மாடு வளர்க்கும் சாமானியனின் வாழ்வில் காதலுடன் கலந்து உணர்வு பூர்வமாக குடும்ப உறவுகளுக்கு மத்தியில் காதலா காளை மாடா என்ற பாசப் போராட்டத்தை கருவாகக் கொண்ட கதைக்களம், ஜாதி மதங்களை ஒன்றிணைக்கும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லி கட்டை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.
படக்குழு:
இணை தயாரிப்பு: எம்.சரத்குமார், கீர்த்தி வாசன்
இசை – சத்திய தேவ் உதயசங்கர்
ஒளிப்பதிவு: பிச்சுமணி
படத் தொகுப்பு: கி.சங்கர்