நவராத்திரியின் 9 நாட்களும் கொலுவின் வடிவில் நலன்களை தரும் முப்பெரும் தேவியரை வழிபட வேண்டிய முறைகள், ஸ்ரீ விஜயராகவா இசைப்பள்ளி செங்கல்பட்டு மாணவர்களின் வாய்ப்பாட்டு பாடல்கள், சரண்யாஸ் நிருத்ய வித்யாலயா பள்ளி மாணவர்களின் நடனம், வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் அழகான கொலு, பிரபலங்களின் வீடுகளில் வைக்கப்பட்டிருக்கும் கொலு, கோவில்களில் வைக்கப்பட்டிருக்கும் கொலு என புதுயுகம் நேயர்களோடு கொண்டாடும் சிறப்பு நிகழ்ச்சிகளின் தொகுப்பே நலம் தரும் நவராத்திரி.’
அக்டோபர் 15 முதல் 24-ம் தேதிவரை மாலை 5:00 மணிக்கும் அதன் மறு ஒளிபரப்பு காலை 11.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.