Friday, October 4, 2024
spot_img
HomeGeneralசுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி நடத்திய சென்னை கோட்டூர்புரம் ஏ.எம்.எம். பள்ளி!

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி நடத்திய சென்னை கோட்டூர்புரம் ஏ.எம்.எம். பள்ளி!

Published on

செப் 23, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். பள்ளி, உலக மூத்தோர் நாளை முன்னிட்டு, ஆறாவது ஆண்டாக நடத்திய ‘ஏ.எம்.எம். வாக்கத்தான் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நடை பேரணி’ எழுச்சியோடு ந‌டைபெற்றது.மாணவ, மாணவிகள், பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள், ஆசிரியர்கள் என சுமார்‌‌ 1200 பேர் பங்கேற்ற இந்நிகழ்வை தேசிய நடைப் பந்தய வீரர் ஹனீஃபா கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். பள்ளியில் தொடங்கிய நடை பேரணி, காந்தி மண்டபம் சாலை, ‌பொன்னியம்மன் கோயில் தெரு, ஆர்.எஸ். ஶ்ரீதர் தெரு, லாக் தெரு, ஏரிக்கரை சாலை வழியாகச் சென்று மீண்டும் அப்பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. புகை மாசு மற்றும் ஒலி மாசு ஆகியவற்றைத் தவிர்க்க வலியுறுத்திய ஏ.எம்.எம். வாக்கத்தானின் மொத்த பயண தூரம் 5 கிலோ மீட்டர்.

பேரணியில் பங்கேற்றவர்கள் இளைப்பாறிச் செல்ல வசதியாக வழித்தடத்தில் 4 இடங்களில் புத்துணர்ச்சி பானங்கள் வழங்கப்பட்டது. பள்ளி வளாகத்தில் சிறப்பு உடற்பயிற்சி வகுப்பு, சுகாதார பரிசோதனை முகாம், குருதிக் கொடை முகாம், இதயவியல் மருத்துவர் டாக்டர் அருளின் கருத்துரை ஆகியன இடம்பெற்றன.

பேரணியில் பங்கேற்ற அனைவரும் உறுப்பு தானம் செய்வது, மரங்களை வளர்ப்பது, மூத்தோர்களை போற்றுவது, ஜீரோ கார்பன் நிலையை உருவாக்க முயற்சிப்பது, உடல் நலனில் அக்கறை செலுத்துவது என 5 கருத்துக்களை உறுதிமொழியாக ஏற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் மெய்யம்மை வெங்கடாச்சலம், முதல்வர் மகாலட்சுமி, துணை முதல்வர் துஷ்யந்தன், செழியன் குமாரசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

Latest articles

‘ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்’ வகை படைப்பாக ஆலியா பட், ஷர்வரி நடிக்கும் ‘ஆல்ஃபா’ 2025 கிறிஸ்துமஸ் நன்னாளில் ரிலீஸ்!

  பெண்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் முதல் 'ஒய். ஆர். எஃப் ஸ்பை யுனிவர்ஸ்' திரைப்படம் 'ஆல்ஃபா.' பாலிவுட்டின் முன்னணி கதாநாயகிகளில்...

போலீஸ் அதிகாரியாக பிக்பாஸ் சம்யுக்தா; தாதாவாக ஆனந்த்ராஜ்… பூஜையுடன் துவங்கியது ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் படப்பிடிப்பு!

பிக்பாஸ் சம்யுக்தா போலீஸ் அதிகாரியாகவும், ஆனந்த்ராஜ் தாதாவாகவும் நடிக்கும் 'மெட்ராஸ் மாஃபியா கம்பெனி' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. வடசென்னை...

அனைவருக்கும் அனுமதி, அனைவருக்கும் பரிசு… நடிகை சாக்ஷி அகர்வால் பிராண்ட் அம்பாசிடராக இருக்கிற ஏபிசி டாக்கீஸின் தி பிக் ஷார்ட்ஸ் சேலஞ்ச்!

சுயாதீன திரைப்பட படைப்பாளிகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னோடி வெளிப்படையாக அணுகக் கூடிய ஓடிடி திரைப்பட ஸ்ட்ரீமிங் தளமான ஏபிசி டாக்கீஸ்,...

ABC Talkies Announces the Fourth Edition of its Flagship Initiative – The Big Shorts Challenge – Tamil Edition and network expansion

  ABC Talkies, the pioneering open-access film streaming OTT platform dedicated to independent filmmakers, is...

More like this