மிதுன் சக்கரவர்த்தி திரைத்துறை மீது மிகுந்த ஆர்வம் கொண்ட, திறமை வாய்ந்தவர். அவர் தன் முதல் படைப்பாக, புதுமையான கதைக்களம் கொண்ட காதல் திரைப்படம் ஒன்றை எழுதி இயக்கி, முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தனது வர்மா ஃபிலிம் ஃபேக்டரிஸ் நிறுவனம் சார்பில் முதல் படமாக தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் ஹரிணி சுரேஷ் மற்றும் ஸ்வேதா அபிராமி நாயகிகளாக நடிக்கின்றனர்.
படம் பற்றி பேசிய மிதுன் சக்கரவர்த்தி, “சுவாரசியத்திற்கு பஞ்சம் இல்லாத வகையில் உணர்ச்சிகளின் கவின்மிகு கலவையாக உருவாகிவரும் இந்த படம், திரையுலகில் இதுவரை சொல்லப்படாத வகையில் மிகவும் புதுமையான காதல் கதையாக இருக்கும். இம்மாத இறுதியில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளோம். படப்பிடிப்பை தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தி நிறைவு செய்து விரைவில் படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
படக்குழு:-
இசை: அமர்கீத்
ஒளிப்பதிவு: வெற்றிவேல்
படத்தொகுப்பு: புவன்
கலை இயக்கம்: பிரேம்
நடனம்: வரதா
டிசைனர்: கிப்சன் யுகா
மக்கள் தொடர்பு: நிகில் முருகன்