Tuesday, December 16, 2025
spot_img
HomeCinema'கருடன்', 'மகாராஜா' வரிசையில் சேரப்போகும் படம் இது! -'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு...

‘கருடன்’, ‘மகாராஜா’ வரிசையில் சேரப்போகும் படம் இது! -‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் விஜய் மில்டன் பேச்சு 

Published on

விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிக்க, விஜய் மில்டன் இயக்கியுள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ திரைப்படம் வரும் ஜூலை மாதம் வெளியாகவுள்ளது. முன்னதாக ஜூன் 29;2024 அன்று படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் விஜய் மில்டன் பேசியபோது, ” இந்த படம் மூலம் விஜய் ஆண்டனி சாருடன் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘கருடன்’, ‘மகாராஜா’ என சமீபகாலத்தில் தமிழ் சினிமா நல்ல படங்களைக் கொடுத்து வருகிறது. இந்த படமும் அந்த வரிசையில் சேரும்” என்றார்.

விஜய் ஆண்டனி, “என் நண்பர் விஜய் மில்டன் சாருடன் இணைந்து பணியாற்றி இருப்பது மகிழ்ச்சி. இந்தியாவின் தலைசிறந்த ஒளிப்பதிவாளர்களில் இவரும் ஒருவர். ‘பிச்சைக்காரன்’ படத்தில் அருமையாக வேலை செய்திருப்பார். நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் பிரம்மாண்டமாக வந்துள்ள படம் இதுதான்.

சத்யராஜ் சார், சரண்யா மேம், முரளி ஷர்மா சார், டாலி தனஞ்செயன் என இத்தனை சீனியர் நடிகர்களுடன் நடிப்பேன் என நினைக்கவே இல்லை. தயாரிப்பாளரும் எந்தவிதமான சமரசமும் இல்லாமல் நாங்கள் கேட்டதை எல்லாம் கொடுத்தார்.

இசை, கேமரா என எல்லா தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர். படத்தின் கடைசியில் கெட்டவனை அழிக்கக் கூடாது. கெட்டதைதான் அழிக்க வேண்டும் என்று இயக்குநர் சொன்ன விஷயம் பிடித்திருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது. ஜூலை மாதம் படம் வெளியாகும். பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

தயாரிப்பாளர் ‘இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்ச்சர்’ தனஞ்செயன் பேசியபோது, “ஒருவரின் கடந்த காலம் இன்னொருவரின் எதிர்காலம் என்று சொல்வார்கள். அப்படித்தான் இந்தக் கதையும் இருக்கும். டிரெய்லர் போலவே படமும் உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார்.

Latest articles

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டி வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கத்தில் சிறப்பாக...

‘ரொக்க புலி’யும் ‘பாண்டி’யும் கனமான கதாபாத்திரமாக இருக்கும் இந்த சீரியஸான கதையில் எப்படி காமெடியை சேர்த்ததுதான் எனக்கான சவால்! -‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை...

பல் டாக்டருடன் பலான நட்பு… கணவருக்கு தெரிந்து விபரீதம்… கிளுகிளுப்பும் விறுவிறுப்பும் கலந்துகட்டிய ரகசிய சினேகிதனே’ டிசம்பர் 26-ம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது!

சேகர் கன்னியப்பன் இயக்கத்தில் வேல்முருகன், ஸ்வேதா ஸ்ரீம்டன் நடித்துள்ள படம் 'ரகசிய சினேகிதனே.' சென்னையில் கணவன் சந்தோஷுடன் வசிக்கும் சந்தியாவுக்கு...

More like this

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டி வெற்றியாளர்களுக்கு விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

திரைக்குரல் First frame- 2025 குறும்பட போட்டியின் விருது வழங்கும் விழா சென்னை பிரசாத் லேப் திரையரங்கத்தில் சிறப்பாக...

‘ரொக்க புலி’யும் ‘பாண்டி’யும் கனமான கதாபாத்திரமாக இருக்கும் இந்த சீரியஸான கதையில் எப்படி காமெடியை சேர்த்ததுதான் எனக்கான சவால்! -‘கொம்பு சீவி’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் 

'சுப்ரீம் ஸ்டார்' சரத்குமார், 'இளைய கேப்டன்' சண்முக பாண்டியன் விஜயகாந்த் இணைந்து நடிக்கும் 'கொம்பு சீவி' திரைப்படத்தின் இசை...
error: Content is protected !!