தமிழ் சினிமாவில் எண்பதுகளில் கலக்கிய அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், நளினி மூவரும் முதல் முறையாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் ‘மல்லி’ என்ற தொடரில் அசத்தலான கதாபாத்திரங்களை ஏற்று இணைந்துள்ளனர்.
நாயகன் நாயகியை சேர்த்து வைக்கப் போராடும் கதாபாத்திரத்தில் பூர்ணிமா பாக்யராஜும் நளினியும் தரமான பங்களிப்பைக் கொடுக்க, அவர்களுக்கு பதிலடி கொடுத்து கலகலப்பையும் டென்ஷனையும் கூட்டுகிறார் அம்பிகா.
மூன்று முன்னாள் கதாநாயகிகளின் அசத்தலான நடிப்பில் விறுவிறுப்பும் திருப்பங்களும் கலந்து கலகலப்பாகவும் பயணித்துக் கொண்டிருக்கிறது மல்லி மெகா தொடர்.
விஜய், நிகிதா, பேபி ராஹிலா, மாஸ்டர் நிதீஷ், மகன் பாப், தேவ் ஆனந்த், சாய்ராம் வெங்கட், கிருத்திகா, பாரதி மோகன், ஐசக் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.
இயக்கம்: ஸ்டாலின்
திரைக்கதை, வசனம்: தமயந்தி
படைப்பாக்கம்: நீடா கே சண்முகம்
படைப்பாக்கத் தலைமை: பிரின்ஸ் இம்மானுவேல்
இசை: தரண்
ஒளிப்பதிவு: விஸ்வநாத்
திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 9 மணி முதல் 10 மணி வரை சன் டிவியில்ஒளிபரப்பாகும் இத்தொடரை சரிகம நிறுவனம் சார்பில் பி.ஆர்.விஜயலட்சுமி தயாரிக்கிறார்.